பொம்மன், பெல்லி ஆஸ்கர் விருதுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல்!

பொம்மன், பெல்லி ஆஸ்கர் விருதுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல்!

"தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்" ஆவண குறும் படத்திற்கு கிடைத்த ஆஸ்கர் விருதுடன் யானை பராமரிப்பாளர்கள் பொம்மன், பெல்லி ஆஸ்கர் விருதுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

ஓடிடி யில் வெளியாகி ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers ஆவணப் குறும் படத்தில் நடித்த பொம்மனும், பெல்லியும் ஆஸ்கர் விருதுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி யுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இருக்கிறது முதுமலை புலிகள் காப்பகம். அங்கு தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன் மற்றும் பெல்லி என இரண்டு யானை பராமரிப்பாளர்கள் தான் இந்த சாதனையாளர்கள்.

தெப்பக்காடு யானைகள் முகாமில் ரகு என்ற யானை குட்டியை வளர்த்த பொம்மனும், பெல்லியும் அந்த யானைக்குட்டியை தங்களது சொந்த பிள்ளை போலவே வளர்த்தனர். அதேபோல் அம்மு என்ற யானைக் குட்டியையும் அவர்கள் வளர்த்தார்கள். இரண்டு யானை குட்டிகளும், பொம்மனும், பெல்லியும் சொல்வதை அச்சு பிசகாமல் கேட்கும் அளவு உணர்வில் கலந்து விட்டன.

அது தொடர்பான The Elephant Whisperers என்ற பெயரில் கார்த்திகி என்பவரால் உருவாக்கப்பட்ட ஆவண குறும் படத்திற்கு கிடைத்த ஆஸ்கார் விருதினை கையில் பிடித்த படி அவர்கள் மகிழ்ச்சியுடன் சிரிக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி யுள்ளது.

யானைகளின் பராமரிப்பாளர்களுமான பொம்மன், பெல்லி ஆகியோர் ஆஸ்கர் விருதுடன் இருக்கும் புகைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும், அந்த ட்வீட்டில், உலகம் முழுவதும் அன்பை பரப்பும் The Elephant Whisperers க்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளது. இருவரும் ஆஸ்கருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி யுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com