ரயில் நிலையத்தில் போட்டோ ஷூட்!

ரயில் நிலையத்தில் போட்டோ ஷூட்!
Published on

துரை ரயில் நிலையத்தில் திருமண ஜோடிகள் போட்டோ ஷூட் எடுத்துக் கொள்ள மற்றும் தனிபயன் பாட்டுக்கான போட்டோ ஷூட்  எடுத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கட்டண விபரங்களை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தெரிவித்துள்ளார். அதில் ''மதுரை ரயில் நிலையத்தில் புதுமண தம்பதியர் ரூபாய் 5000 கட்டணம் செலுத்தி பல புகைப்படங்கள் எடுத்து கொள்ளலாம். ரயில் பெட்டி பின்புலம் வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் ரூபாய் 1500. மற்ற ரயில் நிலையங்களுக்கான கட்டணம் ரூபாய் 3000 (ரயில் பெட்டிக்கு கூடுதலாக ரூபாய் 1000) என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெளிவாக ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ரயில்வேயின் வருமானத்தைப் பெருக்க இது ஒரு சிறந்த வழி. வருவாய்  இல்லாத காரணத்தால் பல இடங்களில் இருந்த ரயில் நிலையங்கள் தனியாருக்கு கொடுக்கப் பட்டுள்ளது.  அந்த நிலையங்களில் மிக நீண்ட  பிளாட்பாரங்கள் உள்ளன.  அது நீண்ட காலமாக அப்பகுதி மக்களுக்கு  காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடமாக மாறிப் போய்விட்டது.

ரயில்வே இடத்தில் இது போன்ற தனிப்பட்ட பயன்பாடுகள் கூடாது.  இதற்கும் சட்டப்படி அனுமதி வழங்கி வருவாயைப் பெருக்கலாம். மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்து சம்பந்தப்பட்ட நிலையங்களின் வருமானத்தை பெருக்கலாம். காலை மாலை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ரயில்கள் மட்டுமே நின்று செல்லும் அந்த நிலையங்களின் நடைமேடைகள் வேறு எந்த பயன்பாடும் இல்லாமல் சும்மாகவே இருக்கும். அது போன்ற நேரங்களில் சிறு சிறு வியாபாரிகள் பயன்பாட்டிற்கு ஒரு கட்டணம் தீர்மானித்து அவர்கள் வியாபாரம் நடத்த அனுமதி வழங்கலாம்.

சுத்தமாக பயன்பாடு இல்லாமல் மூடப்பட்ட ரயில் நிலையங்கள் ஏராளமாக உள்ளன. அங்கெல்லாம் குடோன்கள் கட்டி தனியார் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு வாடகைக்கு விடலாம். அதன் மூலமாக சரக்கு போக்குவரத்தை அதிகப் படுத்தலாம். உதாரணமாக மயிலாடுதுறை, திருவாரூர் மார்க்கத்தில் எலந்தங்குடி, மங்கநல்லூர், கொல்லுமாங்குடி ஆகிய ரயில் நிலையங்கள் மூடி நீண்டகாலமாகிறது. காரைக்கால், தரங்கம்பாடி, நாகை ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மீன் மற்றும் கருவாடுகள் விற்பனை செய்ய வாடகைக்கு விடலாம். மக்கள் வந்து போகும் இடமாக மாறிய பிறகு ரயில் நின்று செல்ல அனுமதி அளிக்கலாம். 

ஆங்கிலத்தில் Dead Asset என்று சொல்லப்படும் இந்த மாதிரி நிலையங்களை பயன் அதிகம் தரும் இடமாக மாற்றினால், அனைவருக்கும் நன்மை தரும் இடமாக அவற்றை மாற்றலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com