வைரஸ் தொற்று ஏற்பட்டு இரண்டே நாளில் இறக்கும் பன்றிகள்… இதுவரை ஆயிரக்கணக்கில் இறந்துப்போன சோகம்!

pig virus
pig virus
Published on

இலங்கையில் அடையாளம் தெரியாத வைரஸ் ஒன்று பன்றிகளிடையே பரவி வருகிறது. இந்த வைரஸுக்கு இதுவரை ஆயிரக்கணக்கான பன்றிகள் உயிரிழந்துள்ளன..

பன்றிகள் இடையே அவ்வப்போது இதுபோல வைரஸ் பரவும். ஒருசில நேரத்தில் இது வேகமாக பரவி மனிதர்களுக்குப் பரவி பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். ஆனால், சில வைரஸ் மனிதர்களுக்கு பரவாது. சமீபத்தில்தான் கேரளாவில் பன்றிகளிடையே ”Porcine Reproductive and Respiratory Syndrome” எனப்படும் வைரஸ் ஒன்று தீவிரமாக பரவி வந்தது என்ற செய்திகள் வந்தன.

இதனை தடுக்கவில்லை என்றால், இனப்பெருக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இளம் பன்றிகளியிடையே நிமோனியாவை ஏற்படுத்தும். மேலும் இதய செயலிழப்பு, ரத்த நாள அழற்சி, மூளையழற்சி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டது.

அந்தவகையில் தற்போது இலங்கையில் என்ன வைரஸ் என்றே தெரியாத வைரஸ் ஒன்று பரவி பன்றிகளிடையே உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.

அநுராதபுரம் மத்திய நுவரகம் மாகாண பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட உளுக்குளம் பகுதியில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலால் பன்றிகள் மற்றும் கன்றுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இதுகுறித்து விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்.

இந்த வைரஸ் இரண்டு நாட்களில் பன்றிகளை கொன்றுவிடும் என்றும் கூறப்படுகிறது. இதுவரை 800 பன்றிகள் உள்ள பண்ணைகளில் சுமார் 200 பன்றிகளும், 300 பன்றிகள் உள்ள பண்ணைகளில் 50 முதல் 60 பன்றிகளும் இறந்துள்ளன. இதுவரை இறந்த கன்றுகளின் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதியில் சுமார் இருபது பன்றிப் பண்ணைகள் உள்ளதாகவும், அந்தப் பண்ணைகள் அனைத்திலும் இவ்வாறு பன்றிகள் இறந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
News 5 - (16.10.2024) சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட்!
pig virus

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கால்நடை மருத்துவர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். எவ்வாறாயினும் அதற்கான தீர்வுகளை வழங்க கால்நடை வைத்தியர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பன்றிகள் அதிக அளவில் உயிரிழப்பதால், சில பண்ணைகளில் சேதம் ஒரு கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த உயிரிழப்புகள் மற்றும் இதனால் ஏற்பட்ட நஷ்டம் ஆகியவையால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com