வாக்காளர்களை கவரும் விதத்தில் பசுமை மற்றும் பிங்க் வாக்குச்சாவடிகள்..!

pink polling booth
pink polling booth
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட சோழவரம் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் ஊராட்சியின் அறந்தாங்கல் கிராமத்தில் ஆட்டந்தாங்கல் அரசுப் பள்ளியில் வாழை மரங்கள் கட்டியும், பச்சை வண்ணங்கள் தீட்டியும், பச்சை வண்ண தரை விரிப்பான்கள், இரு பக்கங்களிலும் செடிகள் வைத்து மேலே பசுமை பந்தல் அமைத்தும் இயற்கை சூழலை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களைக் கவரும் வகையில் பசுமையான ஒரு வாக்கு சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பசுமை வாக்குச்சாவடியில் தென்னை ஓலை கட்டி செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

பிங்க் வாக்குச்சாவடி:

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் ஊராட்சி அரசுப் பள்ளியில் பெண் வாக்காளர்களைக் கவரும் விதத்தில் 'பிங்க்' வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. பிங்க் நிறத்திலான சுவர்கள், தரை விரிப்புகள், டேபிள் சேர் என  அனைத்தும் பிங்க் நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com