#JUST IN : இபிஎஸ் உடன் பியூஷ் கோயல் ஆலோசனை..!

eps -piyush goyal
eps -piyush goyalimage source:Dailythanthi
Updated on

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதியில் பிரதமரின் ரோடு ஷோ இன்று மாலை நடைபெற இருக்கிறது. அதற்காக பிரதமர் வருகிறார். அவரை வரவேற்பதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வந்திருக்கிறார்கள். பிரதமரின் ரோட் ஷோவில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வந்துள்ளார். அவர் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார். டிடிவி தினகரன், ஜிகே வாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரதமரின் ரோட் ஷோவில் பங்கேற்க உள்ளனர்.

நாகர்கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி தங்கியுள்ள தனியார் விடுதியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான எதிர்ப்புகளை சமாளிப்பதற்கும், திமுகவின் கருப்புக் கொடி போராட்டம் சமாளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர்கள் தீவிர ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

logo
Kalki Online
kalkionline.com