நடுவானில் தீப்பிடித்த விமானம்... பயணிகள் பீதி.....!

நடுவானில் தீப்பிடித்த விமானம்... பயணிகள் பீதி.....!

அபுதாபியிலிருந்து, கேரளாவின் கோழிக்கோட்டிற்குப் புறப்பட்டுச் சென்ற, ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், உயரக் கிளம்பிய சிறிது நேரத்தில், தீப்பிடித்ததால், உடனடியாக அபுதாபி விமானத் நிலையத்திற்கே திரும்பிப் பத்திரமாக தரையிறங்கியது.

'விமானம் 1000 அடி உயரத்தில் பறந்த போது, ஒரு இன்ஜினில், தீப்பிடித்ததை அறிந்த விமானி, உடனே அபுதாபிக்கே சென்று பத்திரமாக தரையிறக்கினார்' என்று, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மேலும் அந்த விமானத்தில் பயணம் செய்த 184 பயணிகளும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்றும் DGCA தெரிவித்துள்ளது.

'B737-800 என்ற ,VT-AYC XI348', எனும் விமானம் , தீப்பிடித்ததன் காரணமாக, அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, புறப்பட்ட இடத்திற்கே, பயணிகளுடன், பத்திரமாக அவசரமாகத் தரையிறக்கப் பட்டதாகவும் DGCA தெரிவித்துள்ளது.

இது சம்பந்தமாக ஒழுங்குமுறை ஆணயத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இரவு 8.04 மணிக்கு இறங்குவதற்கு தயார் செய்யப்பட்டு, இரவு 8.26க்குப் பாதுகாப்பாக தரையிறங்கியது, என கொச்சின் விமான நிலைய பொறுப்பாளர் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக கடந்த 29ந்தேதி, ஷார்ஜாவிலிருந்து புறப்பட்டு வந்த, ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம், 'ஹைட்ராலிக் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அவசரமாகக், கொச்சின் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதன் காரணமாகக், கொச்சின் விமான நிலையத்தின் ஓடுபாதைகள் எதுவும் மூடப்படவில்லை. விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு போன்றவைகளில் எந்த தடங்கல்களும் இல்லை எனவும், ஷார்ஜாவிலிருந்து வந்த, பயணிகள் 193 பேர், ஆறு பணியாளர்கள் உட்பட அனைவரும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் CIAL (cochin international airport limited) தெரிவித்துள்ளது.

இதே போல, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கடந்த ஜனவரி 23ந்தேதி, தொழில்நுட்பப் பிரச்னைகள் காரணமாக, திருவனந்தபுரத்திலிருந்து 8.30மணிக்கு, மஸ்கட் புறப்பட்டுச் சென்ற விமானம் சென்ற விமானம், ‌'டேக் ஆஃப்' செய்த 45 நிமிடத்தில், 9.17 மணிக்கு, மீண்டும் திருவனந்தபுரத்திலேயே தரையிறங்கியது என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இன்னொரு சம்பவமும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், 2022 டிசம்பர் மாதம் நடந்திருக்கிறது. கோழிக்கோட்டிலிருந்து துபாய் சென்ற விமானத்தில், பாம்புவும் பயணம் செய்தது(?!) கண்டு பிடிக்கப்பட்டு, அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக DGCA அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com