15-ம் தேதி வரை வெயிட் ப்ளீஸ்.. பெரிய அறிவிப்பு காத்திருக்கு; டொனால்ட் டிரம்ப்!

டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024-ம் ஆண்டு நடக்கவுள்ள நிலையில், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இம்மாதம் 15-ம் தேதி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப்  3-வது முறையாக அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதை உறுதி செய்யும் வகையில், நேற்று ஓஹியோவில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது "நவம்பர் 15-ம் தேதி மிகப் பெரிய அறிவிப்பை வெளியிடப் போகிறேன்," என்று டிரம்ப் கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் கடந்த 2016-ம் ஆண்டு, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து, அமெரிக்காவின் 45-வது அதிபராக டிரம்ப் பதவியேற்றார்.

பின்னர் மீண்டும் 2-ம் முறையாக 2020-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனிடம் தோற்றார்.

இந்நிலையில் 3-வது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவது குறித்து இம்மாதம் 15-ம் தேதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com