#BREAKING : +2 ரிசல்ட் வெளியாகும் தேதியில் திடீர் மாற்றம்?

exam
exam
Published on

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே தேர்வு முடிவுகளை வெளியிடலாமா என்பது குறித்து தேர்வுத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. 

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை  முன்கூட்டியே வெளியிட தேர்வுத்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மே 8ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடலாமா என்பது குறித்து தேர்வுத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. 

மே 4ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளானது வெளியிடப்படும் நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது.

இந்தத் திடீர் மாற்றத்திற்கு முக்கிய காரணமாகபார்க்கப்படுவது மே 4-ஆம் தேதி வெளியாகவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆகும். தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய அரசியல் சூழல் மற்றும் கொண்டாட்டங்கள் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கான பணிகளைப் பாதிக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
என் வீட்டிற்கு ஏன் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ரெய்டு வரவில்லை? சீமான் கேள்வி!
exam

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com