இதய வடிவில் புளூட்டோவில் பனிப்பாறைகள்: நாசா வெளியிட்ட அரியத் தகவல்!

இதய வடிவில் புளூட்டோவில் பனிப்பாறைகள்: நாசா வெளியிட்ட அரியத் தகவல்!

மெரிக்காவின் வானியல் ஆய்வு நிறுவனம் நாசா. பூமிக்கு வெளியே இருக்கும் கோள்கள், நட்சத்திரம் போன்றவற்றைக் குறித்து ஆய்வு செய்து, பூமிக்கு அவை குறித்த செய்திகளை அவ்வப்போது தெரிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது அரிய புகைப்படம் ஒன்றையும், அது குறித்த தகவலையும் வெளியிட்டு இருக்கிறது நாசா. அதன்படி, பூமிக்கு அப்பால் நெடுந்தொலைவில் இருக்கக் கூடிய புளூட்டோவில் பனிப்பாறைகள் உள்ளதைக் கண்டறிந்து அதன் புகைப்படத்தை அனுப்பி இருக்கிறது.

சூரியனைச் சுற்றி வரும் ஒன்பது கோள்களில் கடைசியாக, மிகவும் தொலைவில் உள்ள கோள்தான் புளூட்டோ. அளவில் மிகச் சிறிய கோள் இதுதான் என்று சொல்லப்படுகிது. இது பூமியில் இருந்து சுமார் 5.9 பில்லியன் கிலோ மீட்டர், அதாவது 590 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு கோள்கள் பட்டியலில் இருந்து புளூட்டோவை நீக்குவதாக அறிவியலாளர்கள் அறிவித்தனர். ஆனாலும், அது குறித்த ஆராய்ச்சியில் நாசா ஆய்வு மையம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்தச் சூழலில்தான் தற்போது புளூட்டோ குறித்து ஒரு படத்தை வெளியிட்டிருக்கும் நாசா மையம், அதில் பனிப்பாறைகள் இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறது. அதுமட்டுமின்றி, அந்தப் பனிப்பாறைகள் இதய வடிவில் இருப்பதாகவும், இது தவிர, அதில் மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் சமவெளிகள் இருப்பதாகவும் நாசா ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. மேலும், இவை எல்லாம் மீத்தேன் மற்றும் நைட்ரஜனால் உருவாகி வந்தவையாக இருக்கலாம் எனவும் நாசா கூறி இருக்கிறது.

பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன. மற்ற கோள்களில் எந்த உயிரினமும் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை. ஆகவே, பூமிக்கு அப்பால் உயிரினங்கள் ஏதும் வாழ்கின்றனவா என்பதை நாசா உள்ளிட்ட வானிலை ஆய்வு மையங்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றன. அப்படி எந்த கிரகத்திலாவது உயிர் வாழும் சூழ்நிலை இருக்கும் பட்சத்தில், மனிதர்கள் அங்கு குடியேறும் கனவில்தான் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com