சூடு பிடிக்கும் அரசியல் களம் : பிரச்சாரத்தில் ஓபனாக உடைத்த அண்ணாமலை..!

annamalai
annamalaisource:india today
Published on

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக ஏப்ரல் 18ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் கோவை வரவுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் பாஜக தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இறுதி கட்ட பரப்புரை வேகமாக நடைபெற்று வருகிறது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் அவர்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்து வருகிறார்கள். அந்த வகையில் பல்வேறு மாவட்டங்களுக்கும் வருகை தருகின்ற முதல்வர் மோடி பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 18ஆம் தேதி கோவையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.

இன்று மாலை நாகர்கோவிலில் ரோடு ஷோ செல்லும் பிரதமர் மோடி அவர்கள் 18ஆம் தேதி கோவையில் ரோட் ஷோ மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதே நாளில் மேட்டுப்பாளையத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் கலந்து கொள்கிறார். 

18ஆம் தேதி கோவை மாவட்டத்தில் ஒரு பக்கம் பிரதமரும் மறுபக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
தமிழகமெங்கும் கருப்பு கொடி பறக்க விடும் போராட்டம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!
annamalai

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com