இந்தியாவில் 7 மாநிலங்களில் மித்ரா மெகா ஜவுளி பூங்கா! பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியாவில் 7 மாநிலங்களில் மித்ரா மெகா ஜவுளி பூங்கா!  பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியாவில் 7 மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள் ரூ.4,445 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.

இது குறித்து மோடி தனது டுவிட்டர் தளத்தில் "தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மராட்டியம், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பிரதமர் மித்ரா மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்" என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பூங்காக்கள் 'பண்ணை முதல் இழை முதல் தொழிற்சாலை முதல் பேஷன் முதல் வெளிநாடு' என்ற பார்வைக்கு ஏற்ப ஜவுளித்துறையை ஊக்குவிக்கும். பிரதமர் மித்ரா மெகா ஜவுளி பூங்காக்கள் ஜவுளித் துறைக்கான அதிநவீன உள்கட்டமைப்புகளை வழங்கும். அத்துடன் கோடிக்கணக்கான முதலீடுகளை ஈர்ப்பதுடன், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். 'இந்தியாவில் தயாரிப்போம்' மற்றும் 'உலகுக்காக தயாரிப்போம்' திட்டங்களுக்கு இது மிகப்பெரிய உதாரணமாக இருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பண்ணையில் இருந்து நூல் இழை, அது தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு அங்கு ஆடை வடிமைப்பு, தயாரிக்கப்பட்ட ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என்ற செயல்பாட்டின் அடிப்படையில் ஜவுளித்துறையை இந்தப் பூங்காக்கள் வலுப்படுத்தும். இந்த ஜவுளிப் பூங்காக்கள், ஜவுளித் துறைக்கு அதிநவீன உள்கட்டமைப்புகளை வழங்குவதுடன் கோடிக்கணக் கான முதலீடுகளை ஈர்த்து லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

சென்ற ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரையில் இந்தத் திட்டத்தில் பங்கேற்க 67 விண்ணப்பங்கள் மத்திய அரசுக்கு வந்தன. அதில், 64 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும், அதில் 56 விண்ணப்பங்கள் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ள நிலையில் புதிய நிறுவனம் தொடங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய ஜவுளி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பூங்காக்கள் மூலம் தற்சார்பு இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் இணைந்துள்ள மேற்படி 7 மாநிலங்களின் மக்களுக்கு வாழ்த்துகளையும் மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல் பியூஸ் கோயல் தெரிவித்து இருந்தார்.

இந்த பூங்காக்கள் மூலம் 20 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவித்திருந்த அவர், ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com