கர்நாடக தேர்தல் தோல்விக்கு பிறகு, பாஜக ஆளும் முதல்வர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Updated on

புதிய பார்லிமென்ட் மாளிகையை மிகுந்த ஆரவாரத்துடன் திறந்து வைத்த பிரதமர், கட்சித் தலைமையகத்தை அடைந்து, பாஜக ஆளும் மாநிலங்களின் பல திட்டங்கள் மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து விவாதித்தார். கலந்தாய்வில் கலந்து கொண்ட மாநில முதல்வர்களில் தேர்தல் நடைபெறும் மத்தியப் பிரதேசம் உட்பட பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் அனைவருமே தாங்கள் ஆளும் மாநிலங்களின் நல்லாட்சி, வளர்ச்சிகள் மற்றும் ஏழைகளுக்கான நலத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்த அறிக்கை அட்டைகளை சமர்ப்பித்ததாக, பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

உட்கட்சி அளவில் சமீபத்தில் நிகழ்ந்து முடிந்த கர்நாடக தேர்தல் தோல்விக்குப் பிறகு பிரதமர் மோடி கூட்டும் முதல் கூட்டம் என்பதால் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த கலந்தாய்வில் "மக்கள் நலத் திட்டங்களை ஏழைகளுக்கு எடுத்துச் செல்லவும், 'ஜன்-அபியான்' போன்ற பல்வேறு எளிதான தொடர்பு முறைகள் மூலம் பாஜக அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தவும் பிரதமர் கேட்டுக் கொண்டார்" என்று பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

புதிய பாராளுமன்ற திறப்பு விழா நாளில், வளர்ச்சி மற்றும் நல்லாட்சி நிகழ்ச்சி நிரல்களுக்குப் பிறகு நடந்த இந்தக் கூட்டத்தில், சமீபத்திய கர்நாடக தேர்தல் தோல்வி மற்றும் பிற வளர்ந்து வரும் அரசியல் சூழ்நிலைகளின் பின்னணியில் 2024 இல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகள் குறித்தும் விரிவான விவாதம் செய்யப்பட்டது.

மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் அனைத்து மக்களவைத் தொகுதிகளையும் உள்ளடக்கி ஒரு மாதத்திற்கு சிறப்பு தொடர்பு அபியானை வெற்றிகரமாக நடத்துவது குறித்த விவாதமும் நடைபெற்றதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

"இந்த நன்கு வடிவமைக்கப்பட்ட உத்தியின், ஒரு பகுதியாக, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள், பாஜக இருக்கும் ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா போன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி நாடு முழுவதும் டஜன் கணக்கான பொது பேரணிகளில் உரையாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதிகாரத்தைப் பறித்துத் தரக்கூடிய எந்த ஒரு வாய்ப்பையும் நாங்கள் அந்தக் கலந்தாய்வில் விவாதிக்காமல் விட்டுவிடவில்லை” என்று பாஜக நிர்வாகி ஒருவர் கூறினார்.

பிரதமர் மோடியின் அந்த வெற்றிகரமான கலந்தாய்வில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பொது மக்களை மையமாகக் கொண்ட திட்டங்கள் மற்றும் அவற்றை திறம்பட செயல்படுத்துவது குறித்த வழிமுறைகள் குறித்து பாஜக முதல்வர்கள் அனைவரும் மோடியின் தலைமையில் விவாதித்ததாக அறியப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com