தெய்வீக திருமண பந்தம்: விஜய் - ராஷ்மிகா ஜோடியை மனதார வாழ்த்திய பிரதமர் மோடி..!!

PM Modi wishes Vijay and Rashmika
PM Modi wishes Vijay and Rashmika
Published on

தெலுங்கு திரை உலகின் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் விஜய் தேவரகொண்டா , பான் இந்தியா முன்னணி கதாநாயகியாகவும் நேஷனல் கிரஷ் ஆகவும் இருப்பவர் ராஷ்மிகா மந்தனா, இதேபோல் விஜய் தேவரகொண்டாவிற்கும் ஏராளமான ரசிகைகள் இந்தியா முழுக்க உள்ளனர். தமிழில் ராஷ்மிகா 'சுல்தான்' மற்றும் 'வாரிசு' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து 'கீதா கோவிந்தம்' என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஆந்திரா , தெலுங்கானா மட்டுமல்லாமல் தமிழ் நாட்டிலும் தியேட்டர்களில் நன்றாக ஓடியது.மேலும் இந்த திரைப்படத்தின் வரும் பாடல்கள் தமிழ் நாட்டிலும் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது, அதிலும் குறிப்பாக "இன்கேம் இன்கேம்" பாடல் தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

இந்த திரைக்கதையில் எலியும் பூனையுமாக சண்டையிட்டு காதலிக்கும் இந்த ஜோடி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அப்போதே இந்த திரைஜோடி நிஜஜோடியாக மாறினால் இன்னும் அழகாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது. இவர்கள் காதலிப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

சமீபத்தில் இந்த ஜோடி தங்கள் திருமண பந்தத்தில் இணையப் போவதாக அறிவித்து இருந்தனர். இந்த ஜோடியை ரசிகர்கள் "விரோஷ்" என்று அன்பாக அழைக்கின்றனர். இன்று பிப்ரவரி 26 ஆம் தேதி உதய்பூரில் உள்ள ஐடிசி மொமென்டோஸில் பிரமாண்டமான முறையில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். ஏற்கனவே இந்த திருமணத்திற்கான கொண்டாட்டங்கள் ஐடிசியில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

விரோஷ் ஜோடி திருமணம் தெலுங்கு மற்றும் குடகு கலாச்சாரத்தை பின்பற்றி நடைபெற உள்ளது. இரு குடும்பங்களும் வேறு வேறு கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளை பின்பற்றினாலும் ஒருவருக்கு ஒருவர் அவர்களின் பண்பாட்டை மதித்து, ஒருமித்த உணர்வுடன் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த ஜோடிக்கு வாழ்த்து செய்தியினை அனுப்பியுள்ளார்.

அதில் , 

திருமதி. மாதவி மற்றும் திரு. கோவர்தன் ராவ் தேவரகொண்டா ஜி அவர்களுக்கு,

26 பிப்ரவரி 2026 அன்று நடைபெறவுள்ள விஜய் மற்றும் ராஷ்மிகா ஆகியோரின் திருமணத்திற்கு நீங்கள் என்னை அழைத்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த உண்மையான மகிழ்ச்சியான மற்றும் மங்கலகரமான தருணத்தில், தேவரகொண்டா மற்றும் மந்தனா குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இது விஜய் மற்றும் ராஷ்மிகாவின் வாழ்வில் ஒரு புதிய, அழகான அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. ‘சகா சப்தபதா பவ’ என்ற உணர்வுடன், அதாவது ஏழு படிகளை ஒன்றாக எடுத்து வைப்பதன் மூலம், இந்த தம்பதியினர் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக மாறுகிறார்கள்.

விஜய் மற்றும் ராஷ்மிகா ஆகிய இருவருமே திரைப்படங்களில் திரைக்கதைகளுக்குப் புதியவர்கள் அல்ல. ஆனால், அன்பு மற்றும் பாசத்தால் நிறைந்த, இறைவனால் எழுதப்பட்ட இவர்களது நிஜ வாழ்க்கையின் இந்த அத்தியாயம், அவர்கள் வெள்ளித்திரையில் உருவாக்கிய மாயாஜாலத்தை விட நிச்சயம் மிளிரும்.


வரவிருக்கும் நாட்கள், மாதங்கள் மற்றும் ஆண்டுகள் பகிரப்பட்ட கனவுகளாலும் அவற்றின் நிறைவேற்றங்களாலும் நிரப்பப்படட்டும். சிந்தனையுடனும் அன்புடனும், அவர்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் குறைகளை ஏற்றுக்கொண்டு, ஒருவருக்கொருவர் பலங்களைக் கற்றுக்கொண்டு, உண்மையான துணைகளாக வாழ்க்கைப் பயணத்தைத் தொடரட்டும்.


இந்த முக்கிய தருணத்தில் தம்பதியினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆசிகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,

நரேந்திர மோடி

பிரதமரின் வாழ்த்து செய்தி தற்போது ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

PM Modi sends wishes to Vijay and Rashmika
PM Modi sends wishes to Vijay and Rashmika
இதையும் படியுங்கள்:
வைரலாகும் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண அழைப்பு பெட்டி..! நேஷன் க்ரஷ் பர்ஃப்யூமும் - ‘ரவுடி’ டி-ஷர்ட்யூம்..!
PM Modi wishes Vijay and Rashmika

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com