ட்விட்டரை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக எலோன் மஸ்க்கை சந்திக்கவுள்ள பிரதமர் மோடி!

ட்விட்டரை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக எலோன் மஸ்க்கை சந்திக்கவுள்ள பிரதமர் மோடி!
Published on

மெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இன்று அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது 20க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார். குறிப்பாக  ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தப்பட்ட பிறகு முதல் முறையாக எலான் மஸ்க்கை மோடி சந்திக்கயிருப்பது கவனம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து அரசு வட்டாரங்களின் வெளியான தகவலின்படி, பிரதமர் மோடி இன்று நியூயார்க்கில் தரையிறங்கிய பின்னர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட தலைவர்களை சந்திக்கவுள்ளார். இந்த பட்டியலில் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியவரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக 2015-ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு சென்றிருந்த பிரதமர் மோடி அப்போது மஸ்க்கை சந்தித்தார். அப்போது, எலான் ​​மஸ்க் ட்விட்டரை சொந்தமாக வைத்திருக்கவில்லை. எலான் மஸ்க் உடனான பிரதமரின் தற்போதையை சந்திப்பு டெஸ்லா தனது இந்திய தொழிற்சாலைக்கான நிறுவதற்கான இடத்தை தேர்வுச் செய்வதற்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ளுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ‘தி வால் ஸ்ட்ரீட் நாளிதழின் நேர்காணலின் போது, ​​இந்தியாவின் வாகனம் உற்பத்தி செய்ய ஆர்வமாக உள்ளீர்களா என எலான் மஸ்க்கிடம்  கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு "நிச்சயமாக,"  என அவர் பதிலளித்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் டெஸ்லா தனது இந்திய தொழிற்சாலையை அமைப்பதற்கான இடத்தை இறுதி செய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

2015ம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியர்களுடன் பிரதமர் மோடி- எலான் மஸ்க்
2015ம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியர்களுடன் பிரதமர் மோடி- எலான் மஸ்க்Editor 1

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தில், நோபல் பரிசு பெற்றவர்கள், பொருளாதார வல்லுநர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த நிபுணர்களை அவர் சந்திக்கவுள்ளார். இந்தத் தலைவர்களுடனான பிரதமரின் உரையாடல்கள், அமெரிக்காவின் வளர்ச்சிகளைப் புரிந்துகொள்வதற்கும் சாத்தியமான ஒத்துழைப்புகளை ஆராய்வதற்கும் நோக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது.

அதேபோல் எலான் மஸ்க் தவிர, எழுத்தாளரும் வானியற்பியல் நிபுணருமான நீல் டி கிராஸ் டைசன், பொருளாதார நிபுணர் பால் ரோமர், புள்ளியியல் நிபுணர் நிக்கோலஸ் நாசிம் தலேப் மற்றும் முதலீட்டாளர் ரே டாலியோ ஆகியோரையும் பிரதமர் சந்திப்பார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.இந்திய-அமெரிக்க பாடகர் ஃபாலு ஷா, எழுத்தாளரும் ஆய்வாளருமான ஜெஃப் ஸ்மித், முன்னாள் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி மைக்கேல் ஃப்ரோமான், தூதர் டேனியல் ரஸ்ஸல் மற்றும் பாதுகாப்பு நிபுணர் எல்பிரிட்ஜ் கோல்பி ஆகியோரும் பட்டியலில் உள்ளனர்.

மருத்துவரும் நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர் பீட்டர் அக்ரே, சுகாதார நிபுணர் டாக்டர் ஸ்டீபன் கிளாஸ்கோ மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபரும் கலைஞருமான சந்திரிகா டாண்டன் ஆகியோரையும் பிரதமர் சந்திக்க உள்ளார்.மதிப்புமிக்க அரசுமுறைப் பயணமாக இன்று காலை பிரதமர் மோடி  அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார், இந்த பயணத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றுவது, வணிகத் தலைவர்கள் மற்றும் இந்திய வெளிநாட்டவர்களுடனான சந்திப்புகள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுடன் வெள்ளை மாளிகையில் ஒரு அரசு விருந்து ஆகியவை அடங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com