150 ரூபாய் நாணயத்தை வெளியிடும் பிரதமர் மோடி..! கொண்டாட்டத்தில் குஜராத்!!
சர்தார் வல்லபாய் பட்டேலின் 150 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒட்டி பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று ஏக்தா நகருக்கு செல்லும் அவர் அங்கு எலக்ட்ரிக் பேருந்துச் சேவைகளை தொடங்கி வைக்கிறார். மேலும் சுமார் 1400 கோடி மதிப்பிலானபொது மக்கள் நலத் திட்டங்களையும் தொடக்கி வைத்து அடிக்கல் நாட்ட உள்ளார்.
நாளை குஜராத்தில் நடக்க இருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளிலும் பிரதமர் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் சர்தார் வல்லபாய் வல்லபாய் பட்டேலின் அருந்தொண்டுகளை நினைவுகூறும் வகையில் ரூ.150 நாணயத்தை வெளியிட்டு அதை நாட்டுக்கு அர்ப்பணித்து சிறப்புரை ஆற்ற உள்ளார்
பொதுவாக ரூபாய் நாணயங்கள் நம் நாட்டின் சிறப்பு நிகழ்வுகளைக் குறிக்கும் விதமாக வெளியிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 2011 இல் வருமான வரித்துறையின் 150 ஆண்டுகளை நினைவு கூறும் வகையிலும், 2019 இல் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையிலும் புதிய நாணயங்கள் வெளியிடப்பட்டன.
150 ரூபாய் நாணயங்கள் பெரும்பாலும் வெள்ளி, செம்பு, நிக்கல் மற்றும் துத்தநாகம் போன்ற உலோகங்களின் கலவையால் உருவாக்கப்படுகின்றன. 150 ரூபாய் நாணயங்கள், குறிப்பிட்ட ஆண்டு நிறைவு விழாக்கள் அல்லது முக்கியமான நிகழ்வுகளைக் குறிக்க வெளியிடப்படுகின்றன. இந்த நாணயங்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு காசாலைகளில் (அச்சகங்கள்) தயாரிக்கப்படுகின்றன.
பிரதமரின் நாணய வெளியீட்டு விழாவினைத் தொடர்ந்து எல்லையோர காவல் படை,மற்றும் மத்திய ரிசர்வ் காவல்படை ஆகிய படைகளின் அணிவகுப்பையும் பிரதமர் மோடி ஏற்றுக்கொள்கிறார். இந்த வகுப்பின் போது ஜார்கண்டில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் துணிச்சலை வெளிப்படுத்திய எல்லையோர காவல் படை,மற்றும் மத்திய ரிசர்வ் காவல்படை ஆகிய படைகளைச் சேர்ந்த 21 பேர்களுக்கு அவர்களின் வீரதீர செயலுக்கான பதக்கங்களை அளித்து இந்தியப்பிரதமர் அவர்களை கௌரவிக்கவும் இருக்கின்றார்.இதனால் குஜராத் மாநிலம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
நாணயங்கள் அதிக நாள் நம்முடைய பணப்புழக்கத்திற்கு பயன்படுகின்றன என்பதே உண்மை. ஆனால் ரூபாய் நோட்டுகளை அடிக்கடி நாம் பயன்படுத்தும் போது அவை கிழிந்து போவதும், கசங்கிப் போய் நீணட நாள் பயன்பாட்டுக்கு உதவாமலும் போகின்றன. இந்நிலையில் நாணயங்கள் அதிக அளவிலான நமது அன்றாடப் பணப்புழக்கத்திற்கு மிகவும் உதவியாக இருக்கின்றன.அந்த வகையில் தற்போது வெளியிடப்படும் இந்த புதிய 150 ரூபாய் நாணயம் பொது மக்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்றுள்ளது என்றால், அது ஒரு மிகையானக் கூற்று அல்ல.

