DeepFake வீடியோவில் சிக்கவைக்கப்பட்ட பிரதமர் மோடி!

PM Modi DeepFake video!
PM Modi DeepFake video!
Published on

மீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி கார்பா நடனம் ஆடியது போன்ற காணொளி இணையத்தில் வைரலானது. இப்படி போலியாக உருவாக்கப்படும் காணொளிகள் தன்னை கஷ்டப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். 

இப்போது எங்கு பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த விஷயங்களே ட்ரெண்டிங்கில் உள்ளது. பல AI டூள்களைப் பயன்படுத்தி நமது கற்பனைக்கு ஏற்றவாறான விஷயங்களை நம்மால் உருவாக்க முடியும். விரும்பும் பாடல்களை, படங்களை, காணொளிகளை, வடிவங்களை உருவாக்கலாம். நமக்கு என்ன வேண்டும் என AI கருவிகளிடம் கேட்டால் அதற்கு ஏற்ற விஷயங்களை உடனடியாக உருவாக்கித் தந்துவிடுகிறது. அப்படிப்பட்ட தொழில்நுட்பங்களில் ஒன்றுதான் DeepFake. 

DeepFake என்ற செயலியை பயன்படுத்தி ஒருவரது வீடியோவையோ புகைப்படத்தையோ வேறொருவரின் முகத்தைப் பொருத்தி உண்மையானது போலவே போலியாக உருவாக்க முடியும். இதைப் பயன்படுத்தி ஒருவரின் குரலைக் கூட வேறு ஒருவரின் குரலாக மாற்றிக் கொள்ளலாம். சமீபத்தில் கூட யூடியூபில் பிரபலமான தமிழ் பாடல்களை பிரதமர் மோடி பாடுவது போல கேட்டிருப்பீர்கள். இன்ஸ்டாகிராமில் இந்த பாடல்கள் அனைத்துமே வைரலானது. 

நடிகை ராஸ்மிகா மந்தனா, கஜோல், கத்ரீனா கைஃப், சிம்ரன் ஆகியோரின் முகங்களை வேறு ஒருவரின் முகங்களோடு பொருத்தி வெளிவந்த டீப் ஃபேக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த நடிகைகள் தங்களின் கவலையை வெளிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி பெண்களுடன் இணைந்து நடனம் ஆடுவதுபோல டீப் பேக் செய்யப்பட்ட காணொளி இணையத்தில் வைரலானது. 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், “நான் பெண்களோடு இணைந்து நடனம் ஆடுவது போன்ற வீடியோவை சமீபத்தில் பார்த்தேன். அது இணையத்தில் வைரலாகி வருகிறது. இத்தகைய போலி காணொளிகள் எனக்கு பெரும் கவலையை அளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி எச்சரிக்கை விடுத்துள்ளேன். இவை பார்ப்பதற்கு உண்மை போலவே இருந்தாலும் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு செயலி மூலமாக உருவாக்கப்படுகிறது. இத்தகைய தொழில்நுட்பங்களை நாம் பொறுப்புடன் கையாள வேண்டும். ஊடகங்களும் பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டார். 

DeepFake விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கவலையில் ஆழ்ந்திருப்பது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து DeepFake தொழில்நுட்பத்தை இந்தியாவில் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளும், விதிகளும் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com