பிரதமர் மோடியின் சகோதரர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதி

பிரதமர் மோடியின் சகோதரர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதி
Updated on

பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் சிறுநீரக பிரச்னை காரணமாக சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் இளைய சகோதரரான பிரகலாத் தாமோதரதாஸ் மோடி கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்தினருடன் தமிழகம் வந்துள்ளார்.

தற்போது சென்னையில் ஓய்வு எடுத்து வரும் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர் உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பரிசோதனையில் சிறுநீரக பிரச்னை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர் விரைவில் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

logo
Kalki Online
kalkionline.com