திமுக, அதிமுக அரசுகள் நீர் பாசனத்திற்கு எதுவும் செய்யவில்லை: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

திமுக, அதிமுக அரசுகள் நீர் பாசனத்திற்கு எதுவும் செய்யவில்லை: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறியது, தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்விற்கு பருவநிலை மாற்றம், விளைச்சல் குறைவு போன்ற காரணங்களோடு முன்பு 48 சதவீத விளைநிலங்கள் இருந்த தமிழ்நாடு, தற்போது 38 சதவீத விளைநிலங்கள் என்ற அளவிற்கு குறைந்து இருப்பதும் ஒரு காரணம்.

மேலும் கடந்த 50 ஆண்டுகளில் இரண்டு திராவிட கட்சிகளும் நீர் பாசன திட்டங்கள் எதையும் பெரிய அளவில் கொண்டு வரவில்லை, மணல் கொள்ளை, அதோடு இரண்டு அரசுகளும் தடுப்பணையை கட்ட முயற்சி எடுக்கவில்லை இவைகளும் ஒரு காரணம்.

நீர் மேலாண்மைக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். மேலும் அரசு ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்தில் முதலீடு செய்ய வேண்டும் இவைகள் விவசாயத்தை மேம்படுத்தும் வழியாகும்.

முதல்வருக்கும் ஆளுநருக்கு இடையே நடக்கும் மோதல் என்பது தமிழ்நாடை பலவீனப்படுத்தும். தற்போது ஆட்சியை எல்லாம் கலைக்க முடியாது, அதெல்லாம் அந்தக் காலம். தற்போது நீதிமன்றங்கள் வலுவாக உள்ளது. அதனால் ஆட்சியை கலைப்பது என்பதெல்லாம் வெறும் பேச்சு தான் கூறினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு மதுவிலக்கு துறை, "மது விற்பனைத் துறை" போல் செயல்பட்டு வருகிறது. திருமண மண்டபங்களில் மது பயன்பாடு என்ற அறிவிப்புகள் மூலம் மது விற்பனையை ஊக்குவிக்க முயற்சி நடக்கிறதா. கடந்த ஆண்டு மது விற்பனை 36 ஆயிரம் கோடி, தற்போதைய ஆண்டு மது விற்பனை 45 ஆயிரம் கோடி என்று மது விற்பனையை ஊக்கப்படுத்த முயற்சி நடக்கிறது. "தமிழ்நாட்டை, கஞ்சா நாடு" என்று மாற்றிவிடலாம். கஞ்சா விற்பனை, கூலிப்படை கொலை சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. இவைகளைப் பற்றி தெரிந்தும் காவல்துறை நடவடிக்கை எடுப்பது கிடையாது என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com