#BREAKING : தவெக-வினர் ஷாக்..! விஜய் பங்கேற்கும் பெரம்பூர் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு..!

TVk leader vijay
TVk leader vijay
Updated on

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் விஜய் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கியிருந்தார். அதே வேளையில் அவர் தன் பிரச்சாரத்தையும் தொடங்க இருக்கிறார். நாளை ஒரே நாளில் 5 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.

நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்படும் விஜய் காலை 10 மணிக்கு பெரம்பூரின் MKB நகரின் பஸ் டெப்போ அருகே முதல் பாய்ன்ட்டில் பேசுகிறார்.அதைத் தொடர்ந்து கொளத்தூரின் செந்தில் நகரிலும், வில்லிவாக்கம் ஐ.சி.எஃப் சிக்னல் அருகேயும் அண்ணாநகர் ரவுண்டானாவிலும் கோயம்பேடு மேம்பாலம் அருகேயும் என 5 பாய்ன்ட்டுகளில் விஜய் பேசவிருக்கிறார்.

மொத்தம் 5 பாய்ன்ட்டுகளில் 47 கி.மீ தூரத்துக்கு பயணித்து விஜய் பேசவிருக்கிறார். ஒவ்வோர் இடத்திலும் 3000 முதல் 5000 பேர் வரைக்கும் கூடுவார்கள் என தவெக தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நாளை பெரம்பூரில் நடத்த திட்டமிட்டிருந்த தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும் பிரசாரத்திற்கு மாற்று இடம் கேட்டு விண்ணப்பிக்க காவல்துறை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை சற்றும் எதிர் பார்க்காத தவெக-வினர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட உள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com