பிரபல நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு!

பிரபல நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு!

சர்ச்சையாகியுள்ள ஃபர்ஹானா திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இஸ்லாமிய குடும்பப் பின்னணியைக் கொண்ட நாயகியாக முதன்மை பாத்திரத்தில் , ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள இப்படத்திற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் படத்துக்கு தடை கோரி குரல்கள் எழுப்பியுள்ளன.

ஐஸ்வர்யா ராஜேஷ் , ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், ஐஷ்வர்யா தத்தா, அனு மோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஃபர்ஹானா. நெல்சன் வெங்கடேசன் இயக்கிய இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது ஐஸ்வர்யா ராஜேஷின் வீட்டுக்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது.

ஃபர்ஹானா திரைப்படம் இஸ்லாமிய கலாச்சாரத்தையும், இஸ்லாமிய பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக, புகார் எழுந்தது. மேலும் இப்படத்தை வெளியிடக்கூடாது என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். முக்கியமான இஸ்லாமிய பிரபலங்கள், இஸ்லாமிய அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இந்தப் படத்தை தனியாக திரையிட்டுக் காட்டப்பட்டது. அப்போது ஃபர்ஹானா படத்தை பெரும்பாலானோர் எந்தவித சர்ச்சையான காட்சிகளும் இல்லையென கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனாலும் தொடர்ந்து இந்தப் படத்துக்கு ஒரு சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. மேலும், ஃபர்ஹானா படத்தை திரையிடவும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஃபர்ஹனா பட சர்ச்சை காரணமாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒருதரப்பினர் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com