ஆர்.எஸ்.எஸ்.யை விமர்ச்சித்த அசோக் கெலாட்டுக்கு பாஜக பதிலடி!

ஆர்.எஸ்.எஸ்.யை விமர்ச்சித்த அசோக் கெலாட்டுக்கு பாஜக பதிலடி!

பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பாசிஸ்டுகள் என்று விமர்சித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட்டுக்கு அந்த மாநில பா.ஜ.க. தலைவர் சி.பி.ஜோஷி பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியினருக்கு எப்போதும் ஆர்.எஸ்.எஸ். மீது வெறுப்பு உண்டு. இதன்காரணமாகவே அக்கட்சி ஆர்.எஸ்.எஸ்.மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிவருகிறது என்று ஜோஷி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில அரசியல் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி வியாழக்கிழமை கருத்து தெரிவித்த அசோக் கெலாட், "பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாசிஸ்டுகள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. அவர்கள் (பாஜக) மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்தார்கள். அதே நிலைமை எங்களுக்கும் ஏற்பட இருந்தது. இருந்தபோதிலும் நாங்கள் உஷாராக இருந்த்தால் எங்கள் அரசு தப்பியது. மக்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அஷோக் கெலாட்டின் இந்த கருத்துக்கு ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சி.பி. ஜோஷி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆர்எஸ்எஸ் மீது

அச்சமும் வெறுப்பும் கொண்ட அரசியல் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. இதன் காரணமாகவே, அது ஆர்எஸ்எஸ் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் பரிவார் அமைப்புகள் நாட்டிற்கான தங்கள் பங்களிப்பை மிகுந்த அர்ப்பணிப்புணர்வுடன் எவ்வித பாகுபாடுமின்றி செய்துவருகிறார்கள். காங்கிரஸ் கட்சியோ ஒரு குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே செயல்பட்டு வருகிறது. தீவிரவாதிகளை ஆதரிப்பதும், தேச பக்தர்களை அவமதிப்பதும் தான் காங்கிரஸின் வேலை. இதனால் அந்த கட்சி வீழ்ச்சியை சந்தித்து வருகிறு.

ராஜஸ்தான் முதல்வர் கெலோட், தன்னைத் தானே சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும். ஏனென்றால் அவரது கட்சிக்கார்களே அவரை பாசிஸிட் என்று கூறுகின்றனர். முதல்வர் தன்னை மேவாரின் காந்தி என்று கூறிக்கொள்கிறார். ஆனால் அவரது இந்த ஐந்தாண்டு ஆட்சிக் காலம் நாற்காலியை தக்க வைத்துக் கொள்வதிலேயே கடந்துவிட்டது. 2023ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் அவருக்கு வந்து விட்டது. அதனால் ராகுல் காந்தியின் கவனத்தை ஈர்க்க அவர் இவ்வாறெல்லாம் பேசி வருகிறார் என்று கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com