தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய்; ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதோ வெறும் 7000 கோடி! வருஷம் முழுவதும் வழங்கமுடியுமா? புள்ளிவிவரம் சொல்வது என்ன?

தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய்; ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதோ வெறும் 7000 கோடி! வருஷம் முழுவதும் வழங்கமுடியுமா? புள்ளிவிவரம் சொல்வது என்ன?

தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜர் தன்னுடைய பட்ஜெட் உரையில் தெரிவித்திருக்கிறார். அடுத்த மாதம் முதல் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை திட்டத்திற்கு 700 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது மாதம் தோறும் வழங்கப்படவிருக்கும் உரிமைத் தொகையா அல்லது ஆண்டு தோறும் வழங்கப்படவிருக்கிறதா என்று இணையவாசிகள் விமர்சித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஏறக்குறைய 2.20 கோடி குடும்ப ரேஷன்கார்டு அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலான குடும்பங்களில் உள்ள பெண்கள், உரிமைத் தொகை தகுதி பெற்றிருக்கிறார்கள். அதாவது குறைந்தபட்சம் 2 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தந்தாக வேண்டும்.

தகுதியுள்ள குடும்பத் தலைவிகள் என்பதற்கு எந்த அடிப்படையில் என்பது தெரியவில்லை. ஒருவேளை, அரிசி அட்டை வாங்கும் குடும்பத் தலைவர்கள் ஏறக்குறைய 90 லட்சம் பேருக்கு தருவதாக நினைத்தால் கூட 7000 கோடி நிதி ஒதுக்கீடு போதாது.

பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் தருவதற்கு முடிவு செய்யப்பட்டபோது ஏறக்குறைய 5200 கோடி செலவானது. அந்த அடிப்படையில் பார்க்கும்போது 7000 கோடி நிதி ஒதுக்கீட்டை வைத்து இரண்டு மாதங்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை தரமுடியும்.

இதுவரையிலான ரேஷன் கார்டுகளின் பயனாளிகளை ஆதார் எண் அடிப்படையில் ஆய்வு செய்த போது ஏறக்குறைய 15 லட்சம் பேருக்கு வங்கிக் கணக்குகள் இல்லையென்பது தெரிய வந்திருக்கிறது. வங்கிக் கணக்குகள் இல்லாமல் உரிமைத் தொகையை வழங்கவும் முடியாது.

உரிமைத்தொகை திட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். எத்தனை பேருக்கு உரிமைத் தொகை தரப்படவிருக்கிறது. கூடுதல் நிதிச்சுமைக்கு எங்கிருந்து நிதி பெறப்படப்போகிறது என்பதை பற்றியல்லாம் பட்ஜெட் அறிக்கையில் விளக்கம் தரப்படவில்லை.

இன்றைய பட்ஜெட் உரைக்குப் பின்னர் சட்டமன்றம் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. மறுநாள் தெலுங்கு வருட பிறப்பு என்பதால் அரசு விடுமுறை நாளாகும்.

எனவே, சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதங்கள் வரும் வியாழக்கிழமை முதல் தொடரும் என்று தெரிகிறது.

அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத் தொகை என்று தேர்தல் அறிக்கை அறிவித்துவிட்டு தற்போது, தகுதியுள்ள குடும்பத் தலைவிகள் மட்டுமே உரிமைத் தொகைக்காக பரிசீலிக்கப்பட இருக்கிறார்கள் என்பதால் பெண்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

இதை முன் வைத்து அ.தி.மு.கவும் சட்டமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தில் அரசு மீது கடுமையான அழுத்தத்தை தர முடிவு செய்திருக்கிறது. தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய்; ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதோ வெறும் ஏழாயிரம் கோடி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com