பெண் குழந்தை பிறந்தால் 50 ஆயிரமா? இலவச கல்வியா? பாஜக அதிரடி!

பெண் குழந்தை பிறந்தால் 50 ஆயிரமா? இலவச கல்வியா? பாஜக அதிரடி!

பெண் குழந்தை பிறந்தால் 50 ஆயிரம் பணமும், பட்டப்படிப்பு வரை இலவச கல்வியும் வழங்கப்படும் என மேகாலயா பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்துளளார்.

தேர்தல் வந்தாலே அரசியல் களங்கள் சூடுபிடிப்பது வழக்கம். அரசியல்வாதிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளால் மக்களை கவர முயல்வதும் வாடிக்கை. அந்த வகையில் மேகாலயாவில் போட்டியிடும் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேகாலயாவில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தேசிய தலைவரான ஜேபி நட்டா, தங்களது கட்சி சார்பிலான தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், மேகாலயாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 7-வது ஊதியக்குழு அமல்படுத்தப்படும் என்றும், பெண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தையின் பெயரில் 50 ஆயிரம் ரூபாய் பத்திரம் வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும் பெண் குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வியும், கணவனை இழந்து தனியாக குழந்தைகளை வளர்க்கும் பெண்களுக்கு ஆண்டுக்கு 24 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தேசியத் தலைவர் நட்டா
தேசியத் தலைவர் நட்டா

மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற்று மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடித்தது . சட்டப்பேரவைக்கான தேர்தல் 5 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் என்பதால்,2023 மார்ச் மாதத்தோடு மேகாலயாவில் பாஜகவின் ஆட்சி முடிவு பெற உள்ளது.மீண்டும் புதிய ஆட்சி அமைப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

மேகாலயாவில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த 18 ஆம் தேதி வெளியிட்டார். அப்போது மேகாலயாவில் 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெறும் என்றும், மார்ச் 02 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்தார்.

மேகாலயாவில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி சார்பிலும் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களும் வாக்குறுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com