குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க போகும் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க போகும்  தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு!

ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று காலை 11.45 மணிக்கு சந்திக்கின்றனர்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக எம்.பிக்கள் டி.ஆர். பாலு, ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, வில்சன் உள்ளிட்டோர் அடங்கிய தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை டெல்லியில் இன்று காலை 11.45 மணிக்கு சந்தித்து ஆளுநர் விவகாரம் தொடர்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை குடியரசுத்தலைவரிடம் அவர்கள் வழங்க உள்ளனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே அண்மைக்காலமாக தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்வில் உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என கருத்து தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தொடர்ந்து கடந்த 9ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்த கொடுத்த உரையில் சில பகுதிகளை தவிர்த்ததுடன் தமிழ்நாடு அரசு என்ற சொல்லையே பயன்படுத்தவில்லை என ாலும் அரசு குற்றச்சாட்டு வைத்தது. பின்னர், தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாகவே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர் என் ரவி.

இந்த பிரச்சனைகள் தமிழ் நாட்டில் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஆலோசித்த ஆளும் அரசு தமிழ் நாடு அரசின் சார்பாக பிரதிநிதிகள் குழு ஒன்றை டெல்லிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. அவர்கள் குடியரசு த் தலைவர் திரௌபதி முர்முவை இன்று சந்தித்து இது குறித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com