சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக  தனி தீர்மானம்....!

சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தனி தீர்மானம்....!

ஆளுநருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் கண்டிக்கும் வகையிலும் அதற்கு எதிராகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்தார்.

கடந்த சில மாதங்களாகவே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தாலே அது நிராகரிக்கப்பட்டதாக தான் அர்த்தம் என பேசியிருந்தது சர்ச்சையானது

ஆளுநர் மாளிகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வெளிநாட்டு நிதியில் நடைபெற்றது என்றும் பேசியிருந்தார். அவருடைய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆளுநரின் பேச்சுக்கு முதல்வர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவந்தனர். அதனைத் தொடர்ந்து, ஆளுநர் தரப்பிலிருந்து அவருடைய பேச்சு குறித்து முழு விளக்கம் அளிக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அமைச்சர் துரைமுருகன் இந்த தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.

அந்தத் தீர்மானத்தின் மீது எண்ணிக் கணிக்கும் முறையின் கீழ் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன்னதாக அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளுநருக்கு எதிராக தீர்மானம் சட்டப்பேரவையில் வர இருப்பதை முன்னரே அறிந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஓபிஎஸ்க்கு இருக்கை வழங்கியதற்கு எதிர்ப்பு செய்வதாக கூறி வெளிநடப்பு செய்திருந்தது.

இதனையடுத்து வாக்கெடுப்பில் பங்கேற்க கூடாது என்பதற்காக ஓபிஎஸ் அணியும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதனால், பேரவையின் கதவுகள் மூடப்பட்டன. அதனால், பா.ஜ.க உறுப்பினர்களால் வெளிநடப்பு செய்ய முடியவில்லை. பா.ஜ.க உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com