தேனிலியிருந்து தொடங்கியது ஓபிஎஸ்-யின் கூடாரத்தை கலைக்கும் இபிஎஸ்-யின் திட்டம்!

தேனிலியிருந்து தொடங்கியது ஓபிஎஸ்-யின் கூடாரத்தை கலைக்கும் இபிஎஸ்-யின் திட்டம்!

டப்பாடி பழனிச்சாமி சந்தித்து மன்னிப்பு கடிதம் கொடுத்து அதிமுகவில் இணைந்தனர் தேனி மாவட்ட ஓபிஎஸ் அணியினர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பிரிவினையை சந்தித்தது, அதிமுக ஆட்சி அதிகாரத்தை இழந்த பிறகும் மீண்டும் பிரிவினை ஏற்பட்டது. ஆளுமைத்த தலைவர்கள் தான் அதிமுகவில் உள்ளனர் என்ற எண்ணற்ற விமர்சனங்கள் அதிமுகவின் மீதும் எடப்பாடி கே பழனிச்சாமி மீதும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்த வண்ணம் இருந்தன. ஆனால், இந்த விமர்சனங்களை எல்லாம் பொருட்ப்படுத்தாமல் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் தொடர் செயல்பாடுகள் அமைந்த வண்ணம் இருக்கிறது.

அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டி கட்சியை தன்னுடையதாவும், பொதுச்செயலாளராக தன்னை அறிவித்துக் கொண்டு கட்சியின் அதிகார மையம் தான்தான் என்பதை வெளிப்படுத்தினார் இபிஎஸ்,பிறகு ஓபிஎஸ்சை கட்சியிலிருந்து நீக்கி எதிர்ப்பவர்களுக்கு வாய்ப்பு கிடையாது என்பதை வெளிப்படுத்தினார். தற்போது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொதுச் செயலாளராக மாறி இருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த வாரம் அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்கள் மன்னிப்பு கடிதம் அளித்து மீண்டும் அதிமுகவில் இணைந்து கொள்ளலாம் என்று விலகியவர்களுக்கு அழைப்பு விடுத்தார் இபிஎஸ். அதற்கான முதல் நகர்வு ஓபிஎஸ்-யின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திலிருந்து நகர்த்தப்பட்டு இருப்பது இபிஎஸ்க்கு மேலும் வலிமை சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.

தேனி மாவட்டம் கடமலை மயிலை ஊராட்சி மன்ற முன்னாள் ஒன்றிய குழு தலைவர் முருங்கோடை எம்.பி. ராமர் மற்றும் பெரியகுளம் ஒன்றிய வட புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வி.அன்னபிரகாசம் ஆகிய இருவரும் தங்களின் செயல்களுக்கு வருத்தம் தெரிவித்து, நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் அளித்ததால் அவர்கள் கட்சியில் இணைக்கப்படுகிறார்கள், அவர்களுடன் இணைந்து அதிமுகவினர் பணிகளை மேற்கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com