அ.தி.மு.கவினர் வெளிநடப்பு - துணைத்தலைவர் பதவி, நேரலை கோரிக்கைகள் ஏற்க மறுப்பு! கூட்டத்தொடரின் கடைசி நாளில் பரபரப்பு!

அ.தி.மு.கவினர் வெளிநடப்பு - துணைத்தலைவர் பதவி, நேரலை கோரிக்கைகள் ஏற்க மறுப்பு! கூட்டத்தொடரின் கடைசி நாளில் பரபரப்பு!

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி பற்றி முடிவெடுக்கவேண்டும். எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சை நேரலை செய்யவேண்டும் என்று அ.தி.மு.கவினர் முன்வைத்த கோரிக்கைகள் பற்றி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கோபமடைந்த அ.தி.மு.கவினர் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காலை முதலே அ.தி.மு.கவினர் பரபரப்பாக இயங்கி வந்தார்கள். சட்டமன்றம் தொடங்குவதற்கு முன்னதாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் குறித்து சபாநாயகம் அப்பாவுவை அ.தி.மு.க உறுப்பினர்கள் சந்தித்து பேசினார்கள். அ.தி.மு.கவின் சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட விஷயங்களையும் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, போட்டியின்றி அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை விளக்கினார்கள்.

சட்டமன்றம் தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்று அ.தி.மு.க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தார்கள். காவல்துறை மானியக் கோரிக்கைகள் குறித்து பதிலளித்து முதல்வர் ஸ்டாலினை பேச வந்தபோது கோஷம் எழுப்பியதாக சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் இருந்து அ.தி.மு.கவினர் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை நேரலை செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பின்னர் சபாநாயகர் அப்பாவு உறுதியளித்தார். எதிர்க்கட்சி தலைவர் பேசும் போது இரண்டு மணி நேரம் உணவு இடைவேளைக்குக் கூட செல்லாமல் நம்முடைய முதல்வர் அவையில் இருந்தார். ஒருவேளை சட்டமன்ற அவை நாகரீகமாக நடப்பதை அதிமுக விரும்பவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அ.திமு.கவினரின் கோரிக்கைள் அனைத்தும் பரிசீலனையில் உள்ளன. எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு கூடுதல் நேரம் தரப்படுகிறது. சட்டமன்றத்தை புறக்கணித்து அ.தி.மு.கவினர் வெளிநடப்பு செய்வது வருத்தமாகவும், வேதனையாகவும் உள்ளது என்ற சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருக்கிறார்.

அ.தி.மு.கவினரின் வெளிநடப்பு தி.மு.கவினரையும் கோபப்படுத்தியிருக்கிறது. முதல்வர் பேசும்போது, இது தனிப்பட்ட ஸ்டாலின் அரசு அல்ல, திமுக என்ற தனிப்பட்ட கட்சியின் அரசு அல்ல. ஒரு இனத்தின் அரசாக, 8 கோடி மக்களின் அரசாக, திராவிட மாடல் அரசாக திகழ்ந்து வருகிறது.

தமிழ்நாட்டில் சாதி, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறை இல்லை, கலவரங்கள் இல்லை, துப்பாக்கிசூடு இல்லை; அதன் காரணமாகத்தான் தொழிற்சாலைகள், தொழில் முதலீடுகள் தமிழகத்திற்கு கிடைத்து வருகின்றன.

நிதி நெருக்கடி இருந்தபோதும், வருவாய் பற்றாக்குறையை 30 ஆயிரம் கோடியாக குறைத்திருக்கிறோம் என்றெல்லாம் முதல்வர் பேசியிருக்கிறார். மறுத்து பேச வேண்டிய அ.தி.மு.கவினர் இல்லாதது தி.மு.கவினரை உற்சாகமடைய வைத்திருக்கிறது. வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில் இன்னும் சில

அதிரடியான தீர்மானங்களை சட்டமன்றத்தில் இன்று எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com