ஓபிஎஸ்
ஓபிஎஸ்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நடைபெறுகிறது!

இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற உள்ள அதிமுக கூட்டத்தில் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதாவே தொடர்ந்து நீடிப்பார் என சொல்லப்பட்டு வருகிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பு பொது செயலாளராக ஒ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்படுவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அதிமுக பொதுக்குழு தொடர்பாக உள்ள வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

நேற்று இரவு, சென்னை அசோக்நகரில் உள்ள பண்ருட்டி ராமசந்திரன் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

சென்னை வேப்பேரியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனம், போட்டி பொதுக்குழு நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com