அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் வீடுகளில் ரெய்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் வீடுகளில் ரெய்டு!

திமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 

-இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சார்பாகத் தெரிவிக்கப் பட்டதாவது: .

இன்று காலை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு  நடத்தப்பட்டு வருகிறது.

வேல்ஸ் மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு முறைகேடாக உரிமம் வாங்கியதாக சொல்லப்படும் விவகாரம் தொடர்பாக சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளுர் மற்றும் தாம்பரம் ஆகிய நகரங்களில் தலா ஒரு இடத்திலும் என மொத்தம் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல்,தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  முறைகேடு செய்த வகையில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்ப்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

 -இவ்வாறு தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com