மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்!

மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப் பட்டதைக் கண்டித்து அதிமுக சார்பில் வரும் 16-ம் தேதி செங்கல்பட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

-இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துன்பத்துக்கு ஆளாக்கியுள்ள திமுக அரசைக் கண்டித்தும், மின் கட்டணஉயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 16-ம் தேதி  கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன.

செங்கல்பட்டில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையேற்க உள்ளார்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், பங்கேற்க வேண்டும்.

-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com