திமுக அரசு பதவி விலகக் கோரி அதிமுக வரும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம்!

திமுக அரசு பதவி விலகக் கோரி அதிமுக வரும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம்!

ள்ளச்சாராய மரணம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து விசாரணை நடத்தக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று சைதாப்பேட்டை சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி அதிமுகவினர் பேரணியாகச் சென்றனர். இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் மனுவை அளித்தார் எடப்பாடி பழனிச்சாமி. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பழனிச்சாமி, தமிழ்நாடு அரசு மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நிகழ்ந்துவரும் ஊழல்கள், விஷச் சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் போன்றவற்றைத் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், இதற்காக முதலமைச்சர் தனது பதவியில் இருந்து விலக வலியுறுத்தியும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருக்கிறார்.

இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் தொடரும் ஊழல் முறைகேடு, விஷச்சாராயம், போலி மது பானங்களால் ஏற்படும் உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும். இதனை வலியுறுத்தி அதிமுக சார்பில் வரும் 29ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக, திமுக அரசை கண்டித்து சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட 5500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோதமாகக் கூடுதல், பொது அமைதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கூட்டம் சேர்த்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் இவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com