நாகாலாந்து தேர்தல் முடிவுகள் அலசல் - காணாமல் போன காங்கிரஸ்!

நாகாலாந்து தேர்தல் முடிவுகள் அலசல் - காணாமல் போன காங்கிரஸ்!

60 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க கூட்டணி, ஆட்சியமைக்கத் தேவையான 37 இடங்களை பெற்று ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. நாகாலாந்தின் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி - பா.ஜ.க கூட்டணியை எதிர்ககக்கூடிய வலுவான கூட்டணி இல்லை என்பதால் வெற்றி எளிதாகியிருக்கிறது.

தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி 40 தொகுதிகளிலும், பா.ஜ.க 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி 25 தொகுதிகளிலும், பா.ஜ.க 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆக, மொத்தம் 37 தொகுதிகளை பெற்று கூட்டணி அறுதி பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சிக்கு வரவிருக்கிறது. திரிபுராவில் கூட சாத்தியமான எதிர்க்கட்சிகளின் கூட்டணி, ஏனோ நாகாலாந்தில் சாத்தியப்படவில்லை.

தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சியின் தலைவர் நெபியூ ரியோ மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். நாகாலாந்து சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். திமாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி வேட்பாளரான ஹேக்கானி ஜக்காலு வெற்றி பெற்றிருக்கிறார்.

வடகிழக்கு மாநிலங்களில் பணக்கார மாநிலமாக நாகாலாந்தை சொல்ல முடியும். இளைய தலைமுறையினர் அதிகமாக வடகிழக்கு மாநிலங்களிலும் நாகாலந்தும் ஒன்று. ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்களில் நிறைய பேர் மீண்டும் போட்டியிட்டு, கணிசமான வாக்குகளை பெற்று இம்முறை நல்ல வெற்றியை பெற்றிருக்கிறார்கள்.

நாகாலாந்தை பொறுத்தவரை, 60 இடங்களில் ஏறக்குறைய 25 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பவர்கள் பணக்காரர்கள். கடந்த ஐந்தாண்டுகளில் சொத்துக்களை வாங்கி குவித்திருக்கிறார்கள். தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல பா.ஜ.க உறுப்பினர்களும் ஏராளமாக வருமானம் சேர்த்திருக்கிறார்கள்.

2018ல் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கூட தங்களுடைய வருமானத்தை லட்சங்களிலிருந்து கோடிகளில் வைத்திருக்கிறார்கள். இது நாகலாந்தில் மட்டுமல்ல திரிபுரா, மேகாலாயா மாநிலங்களிலும் இத்தகைய மாற்றத்தை பார்க்க முடிகிறது என்கிறார்கள். மூன்று மாநிலங்களிலும் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com