சட்டத்தை மீறினால் மட்டுமே தடை! பஜ்ரங் தள் இயக்கம் செயல்பட தடையேதும் இல்லை - பின்வாங்கும் காங்கிரஸ் தலைவர்கள்!

சட்டத்தை மீறினால் மட்டுமே தடை! பஜ்ரங் தள் இயக்கம் செயல்பட தடையேதும் இல்லை - பின்வாங்கும் காங்கிரஸ் தலைவர்கள்!

பஜ்ரங்தள் உள்ளிட்ட வலது சாரி அமைப்புகளை ஆட்சிக்கு வந்தால் தடை செய்வோம் என்று காங்கிரஸ் கட்சியினர் பேசியதை பா.ஜ.கவினர் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு மாநிலம் முழுவதும் அனுமன் வழிபாட்டை ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் சற்று மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது.

சட்டப்படி செயல்பட்டால் பஜ்ரங்தள அமைப்புக்கு எந்தத் தடையும் இருக்காது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வீரப்ப மொய்லி விளக்கம் தந்திருக்கிறார். அரசியலமைப்புச் சட்டம் சுட்டிக்காட்டு கடமைகைளையும் உரிமைகளையும் காக்கவேண்டும. எந்தேவொரு தனிநபரோ, இயக்கமோ அரசியலமைப்புச் சட்டத்தை மீறமுடியாது.

பஜ்ரங்தள, பி.எப்.ஐ. போன்ற அமைப்புகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீற முடியாது. ஒருவேளை சட்டத்தை மீறினால் அவற்றை தடை செய்யும் முடிவை எங்கள் கட்சி எடுக்கும். சட்டவிரோத, தேச விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே எங்களுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாக வீரப்ப மொய்லி விளக்கம் தந்திருக்கிறார்.

பி.எப்.ஐ., பஜ்ரங்தள அமைப்புகளை தடை செய்து விடுவோம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள தேவையில்லை. சட்டத்தை மீறினால் மட்டும் நடவடிக்கை எடுப்போம். மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டபோது, சர்தார் வல்லபாய் பட்டேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதித்தார். அதற்கு நேரு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கப்பட்டது.

தடை நீக்கப்படுவதற்கு முன்பு, சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. நிபந்தனைகளை ஒப்புக்கொள்வதாக அவர்கள் ஒப்புக்கொண்டபின்னர்தான் தடை நீக்கப்பட்டது. அதுபோல்தான் கர்நாடகாவிலும் நடந்த கொள்வோம் என்று குறிப்பிட்ட வீரப்ப மொய்லி, பஜ்ரங்தள அமைப்பு எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே எங்களுடைய அரசின் நடவடிக்கை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யா மண்டியா பகுதியில் பிரச்சாரம் செய்தபோது இதே கருத்தை எதிரொலித்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் பஜ்ரங் தள் அமைப்பு தடை செய்வது என்பது ஏற்புடையது அல்ல. ஒரு இயக்கத்தை தடை செய்தால், இன்னொரு பெயரில் வரக்கூடும். வெறுப்பு பேச்சுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். அதை நடைமுறைப்படுத்த

காவல்துறையும் நீதிமன்றங்களும் இருக்கிறார்கள். ஆகவே எந்தவொரு அமைப்பையும் தடை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்திருக்கிறார்

பஜ்ரங்தளத்திற்கு தடை என்பது பா.ஜ.கவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது காங்கிரஸ் கட்சியின் வெற்றியை பாதித்துவிடக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் கவலைப்படுகிறார்கள். இது பற்றி பேசாமலே இருந்திருக்கலாம். அதன் மூலம் பா.ஜ.கவுக்கு எந்தவொரு அரசியல் நல்வாய்ப்பையும் பெற்றுத் தராமல் இருந்திருக்கலாம் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com