குஜராத்தில் வரலாறு காணாத வெற்றி ! 7வது முறையாக ஆட்சி அமைக்கிறது பிஜேபி!

Modi- Amithsha
Modi- Amithsha

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வரலாறு காணாத வகையில் மொத்தம் 182 தொகுதிகளில் 156 தொகுதிகளில் வென்று, 7வது முறையாக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸுக்கு 17, ஆம் ஆத்மிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த 1, 5 ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், 64.3 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த தேர்தலைவிட 4 சதவீதம் குறைவாகும். நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி மாலை வரை நடைபெற்றது.

பாஜக
பாஜக

குஜராத் மாநிலம் முழுவதும் 37 இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை சிறிது நேரத்திலேயே பாஜகவின் முன்னணி நிலவரம் தெரிய தொடங்கியது.

பாஜக மூத்த தலைவரும், முதல்வருமான பூபேந்திர படேல், கட்லோடியா தொகுதியில் 2.12 லட்சம் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் அமி யாஜ்னிக்கு 21,000, ஆம் ஆத்மி வேட்பாளர் விஜய் படேலுக்கு 15000 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. எனவே 1.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் பூபேந்திர படேல்.

மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 156 தொகுதிகளைக் கைப்பற்றி, வரலாறு காணாத வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஏற்கெனவே 6 முறை ஆட்சி அமைத்திருக்கும் பாஜக, தற்போது 7-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த வரலாறு காணாத வெற்றியை பற்றி பூபேந்திர படேல் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாஜக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தேர்தலில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. குஜராத்தின் வளர்ச்சிப் பயணம் தொடரும்" என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com