குஜராத்தில் முன்னணியில் பாஜக! கிங் மேக்கர்ஸான அமித்ஷா மோடி கூட்டணி!

BJP
BJP

குஜராத் தேர்தலில் முன்னணியில் ஆளும் பாஜக தொடந்து இருந்து வருகிறது. குஜராத்தின் அசைக்க முடியாத சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளதையே இது காட்டுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட காங்கிரஸின் படுதோல்வியை உறுதியாக்குகின்றது. தற்போது வரை பாஜக 154 க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் வெறும் 17 இடங்களில் தான் முன்னிலையில் உள்ளது.

இதற்கு முன்பு 2014 தேர்தலில் பாஜக வெற்றியில் அமித்ஷாவும், மோடியும் அதிகமாகவே சாதித்து காட்டினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதே போன்றதொரு வெற்றியை தற்போது மீண்டும் சாதித்து காட்டியிருக்கிறது மோடி அமித்ஷா கூட்டணி.

Modi- Amithsha
Modi- Amithsha

தற்போது ஏழாவது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்க போகிறது ஆளும் பாஜக. மோர்பி பால விபத்து பாஜகவின் பின்னடைவு என்று பேசப்பட்ட நிலையில் இந்த வெற்றி பாஜகவினருக்கு புதிய உற்சாகத்தை அளிக்கலாம்.

குஜராத் மாநிலத்தை பொறுத்தவரையில் பாஜக பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மொத்தம் உள்ள 182 இடங்களில் 154 க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் மொத்தம் 18 இடங்களிலும் ஆம் ஆத்மி மொத்தம் 6 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. ஏறக்குறைய பாஜக வெற்றி பெரும் நிலையில் உள்ளதால் பாஜகவினர் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com