இடைத்தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக !

பாஜக
பாஜக

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம், பீகார், அரியானா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

நாட்டில் காலியாக இருந்த 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மகாராஷ்டிர மாநிலம் அந்தேரி கிழக்கு, பீகாரின் மோகாமா, கோபால்கஞ்ச் ஆகிய தொகுதிகள், அரியானாவில் உள்ள ஆதம்பூர் தொகுதி, ஒடிசா மாநிலத்தின் தாம்நகர், உத்தரபிரதேசத்தின் கோலகோகர்நாத் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முனோகோடே ஆகிய 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது. இதில் நான்கில் பாஜக வெற்றியினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக வெற்றி
பாஜக வெற்றி

பீகாரில் கோபால்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுபாஷ்சிங் மனைவி குசும்தேவி 70,032 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஒடிசாவில் தாம்நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சூர்யவம்சி சுராஜ் 80,351 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

உத்தரபிரதேசத்தில் கோலா கோகரநாத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் அமன்கிரிக்கு 1,24,810 வாக்குகள் கிடைத்தன. சுமார் 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

அரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதியில் குல்தீப் பிஷ்னோய் மகன் பவ்யா பிஷ்னோய் 67,492 வாக்குகள் பெற்று சுமார் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மீதமுள்ள மூன்று தொகுதிகளில் அந்தந்த மாநில கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பீகாரின் மோகாமா தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் வேட்பாளர் நீலம் தேவி 79,744 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தெலுங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் வேட்பாளர் கே.பிரபாகர் ரெட்டி 96,598 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

இதே போல் மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் சிவசேனா அணியின் ருதுஜா லட்கே வெற்றி பெற்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com