முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

பொங்கலுக்கு ரொக்க பணம்? முதல்வர் ஸ்டாலின் யோசனை !

கடந்த பல ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. 2022ம் ஆண்டு சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து நியாயவிலைக் கடைகளின் வாயிலாக, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தியது. அதில் கடந்த ஆண்டு வழங்க பட்ட பொருட்களில் தரம் இல்லை என பல்வேறு தரப்பினரிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக வரும் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்காமல், ரொக்கமாக பணம் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் 2023ம் ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இந்த முறை எந்த பரிசு பொருளும் தராமல் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ரூ.1000 பணம் தர முடிவெடுத்து உள்ளதாக தகவல் பரவி உள்ளது. விரைவில், இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், இதில் அதிக குளறுபடி நடந்ததாக எதிர்க்கட்சியினரும், சமூக வலைதளங்களின் மூலமாகவும் கடும் விமர்சனம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே தமிழக அரசு இந்த முடிவிற்கு வந்திருக்கலாம் என்ற கருத்து நிலவிவருகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com