ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்றுள்ளார் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் பணியில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதலில் தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது. 398 தபால் வாக்கள் பதிவாகி உள்ளன. தபால் ஒட்டு 394, சர்வீஸ் ஒட்டு 4 மொத்தம் 398 வாக்கு பதிவாகி உள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் 3 மாநில சட்டசபை தேர்தலிலும், இடைத்தேர்தலைச் சந்தித்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதி தேர்தல்களிலும் முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 10952 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசு 3305 வாக்குகள் பெற்றுள்ளனர்.நாம் தமிழர் 615 வாக்குகள் பெற்றுள்ளார். தேமுக காசி வேட்பாளர் 99 வாக்குகள் பெற்றுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடந்த 27ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

238 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. 77 வேட்பாளர்கள் போட்டியில் இருந்ததால் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் ஓட்டுச்சாவடிகளில் வாக்களித்தனர். இது 74.79 சதவீதமாகும்.

தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல் சுற்று வாக்கு எண்ணிகை முடிந்து இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிகை நடைபெற்று வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com