காங்கிரஸ்
காங்கிரஸ்

ஹிமாச்சலை கைப்பற்றியது காங்கிரஸ்!

இமாசல பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று உள்ளது . ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. 24 தொகுதிகளையே கைப்பற்றி உள்ளது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர். இதன்மூலம் இமாசல பிரதேசத்தில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

இமாசல பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைப்பெற்று வந்தது. மொத்தம் 68 இடங்களை கொண்ட இந்த மாநிலத்தின் சட்டசபைக்கு கடந்த நவம்பர் 12-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. அமைதியான முறையில் நவம்பர் 12-ந்தேதி வாக்கு பதிவு நடந்து முடிந்தது.

சோனியா காந்தி - பிரதமர் மோடி
சோனியா காந்தி - பிரதமர் மோடி

இந்த தேர்தலில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சிகளும் மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கின. ஆம் ஆத்மி கட்சியும் அத்தனை இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. இடதுசாரி கட்சிகள் 12 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. எனினும், பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது.

பா.ஜ.க.கட்சிக்காக பிரதமர் மோடி தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார். பா.ஜ.க.கட்சி 8 லட்சம் பேருக்கு வேலை, பொது சிவில் சட்டம் அமல் என்கிற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை முன் வைத்தது.

ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை, 300 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் முன் வைத்தது. பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை போன்ற கவர்ச்சி வாக்குறுதிகளை அக்கட்சி அளித்திருந்தது.

இதனை தொடர்ந்து, குஜராத் சட்டசபைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் சேர்த்து இமாச்சல பிரசேத தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதற்காக மாநிலத்தின் 59 இடங்களில் 68 வாக்கு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாநில போலீசாருடன், துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து ஒவ்வொரு சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.

அதில் காங்கிரஸ் கட்சி பல இடங்களில் முன்னிலை பெற்றது. மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், அதைவிட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றதால் காங்கிரசின் வெற்றி உறுதியானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com