காங்கிரஸ்
காங்கிரஸ்

கர்நாடகாவில் காங்கிரஸ் 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை? ஜெயிக்க போவது யார்?

கர்நாடகாவில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், காலை 9 மணி நிலவரப்படி காங்கிரஸ் 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 10 மணிக்கு முழு நிலவரம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

கர்நாடகா வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறவுள்ள சூழலில், தனது நிபந்தனைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி அரசாங்கத்தில், முதலமைச்சராக தான் இருப்பேன் என்றும், முதலமைச்சராக தன்னை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்துள்ளார்.

இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 86 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகின்றன.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தொடக்கம் முதல் முன்னிலையில் இருப்பதால், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com