காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு நீதிமன்றம் சம்மன்!

காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு நீதிமன்றம் சம்மன்!

பஜ்தளம் அமைப்பை தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியாவுடன் ஒப்பிட்டு பேசியதற்காக 100 கோடி இழப்பீடு கேட்டு காங்கிரஸ் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதை அடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

விசுவ ஹிந்து பரிஷத் அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் சங்கப் பரிவார் அமைப்பு இந்த வழக்கை தொடுத்துள்ளது.

இது தொடர்பாக பஜ்ரங் தளம் ஹிந்துஸ்தான் அமைப்பின் தலைவரான ஹிதேஷ் பரத்வாஜ், காங்கிரஸ் தலைவர் மீது வழக்கு தொடுத்திருந்ததை அடுத்து சங்ரூர் மாவட்ட நீதிமன்றம் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போது காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது. அப்போது தேசவிரோத அமைப்புகளான சிமி, அல்காய்தா அமைப்புகளுடன் பஜ்ரங்தளத்தை ஒப்பிட்டு காங்கிரஸ் பேசியதாகத் தெரிகிறது. வெறுப்புப் பேச்சை தூண்டும் வகையில் பேசினால், அவை பெரும்பான்மை அல்லது சிறுபான்மை சமூகத்தைச் சேர்நதவையாக இருந்தாலும் பாப்புலர் பிரன்ட் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதுபோல் பஜ்ரங்தளம் போன்ற அமைப்புகள்

தடை செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

சட்டம் ஒழுங்கு அனைவருக்கும் ஒன்றுதான். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் எந்த தனிப்பட்ட நபரோ அல்லது அமைப்போ அது பாப்புலர் பிரன்ட் அமைப்பாக இருந்தாலும் சரி, பஜ்ரங்தளம் அமைப்பாக இருந்தாலும் சரி வெறுப்புப் பேச்சுகளை தூண்டும் வகையில் செயல்பட்டால் அவற்றுக்கு தடை விதிக்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த்து.

இதையடுத்து ஹிதேஷ் பரத்வாஜ் என்பர் தொடுத்த வழக்கில் பஞ்சாப் மாநில நீதிமன்றம் கார்கேவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com