டெல்லி மக்களுக்கு அநீதி இழைக்கும் பட்ஜெட்! டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார் .

2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் இதுவாகும். பிப்ரவரி 1 ஆம் தேதி 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் டிஜிட்டல் முறையில் அதாவது Paperless பட்ஜெட் ஆகத் தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது .

இந்த 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். மத்திய அரசு மீண்டும் டெல்லி மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் டெல்லி மக்கள் 1.75 லட்சம் கோடி ரூபாயை வருமான வரியாக செலுத்தியுள்ளனர். அதிலிருந்து வெறும் 325 கோடி ரூபாயை மட்டும் டெல்லி வளர்ச்சிக்காக மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. டெல்லி மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

பணவீக்கத்திலிருந்து மீளும் வகையில் இந்த பட்ஜெட்டில் எந்த அம்சமும் இல்லை. மேலும் பணவீக்கத்தை அதிகப்படுத்தும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. மேலும் வேலை வாய்ப்பின்மையை தீர்ப்பதற்கு எந்தவித உறுதியான திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. கல்விக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் 2.64 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு 2.2 சதவீதத்திலிருந்து 1.98 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமானது என அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com