மகேஷ் சைகை பேச்சு
மகேஷ் சைகை பேச்சு

'கழுத்து துண்டிக்கப்படும்' தி.மு.க மேயர் மகேஷ் சைகை பேச்சு சர்ச்சை!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில், கன்னியாகுமரி மாவட்ட மாநகராட்சி மேயரும், தி.மு.க.,வின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலருமான மகேஷ் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை கிளறியுள்ளது.

தி.மு.க வை சேர்ந்த பிரபலங்கள் இவ்வாறு பேசுவது ஒன்றும் புதிதல்லபி என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே 'ஓசி' என அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சு சர்ச்சையை கிளறி இருந்தது.அதனைஎடுத்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தி.மு.க பார்த்து பேசவேண்டும் என்றும் என்னை துங்கவிடுங்கள் வேண்டும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தி.மு.க மேயர் மகேஷ்
தி.மு.க மேயர் மகேஷ்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சைதை சாதிக் குஷ்பு குறித்து பேசி சர்ச்சையை கிளரி இருந்தார். தற்போது கன்னியாகுமரி மேயர் மகேஷ் பேச்சும் சர்ச்சையை கிளப்புவதாகவே இருப்பது தி.மு.க கட்சியினரிடையே அதிருப்தியை கிளறியுள்ளது.

''தேவையில்லாமல் எதையாவது நீட்டினால் துண்டிக்கப்படும்,'' என, கழுத்தில் கையை வைத்து அறுப்பது போல சைகை காட்டி, பா.ஜ.கவினரை எச்சரித்த கன்யாகுமரி தி.மு.க., மேயர் மகேஷ் பேசினால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

நான் இந்த மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்தும் போது, ஊறு விளைவிக்க வேண்டும் என்று நினைத்து பா.ஜ.க கொடியை அல்ல எதையாவது நீட்டினால் துண்டிக்கப்படும். இவ்வாறு மேயர் பேசும் போது, கழுத்தில் கையை வைத்து சைகை செய்தார்.

அதை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். என் மீது வழக்கு வந்தாலும் பரவாயில்லை. அதை சந்திக்க நாங்கள் தயார் நிலையில் உள்ளோம் என ஆவேசமாக பேசியுள்ளார் தி.மு.க., மேயர் மகேஷ் .

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com