அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட விசாரணையில் குறையில்லை : ஆர்.எஸ்.பாரதி வழக்கு தள்ளுபடி!

அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட விசாரணையில் குறையில்லை : ஆர்.எஸ்.பாரதி வழக்கு தள்ளுபடி!
Editor 1

டப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது டெண்டர் முறைகேடு செய்ததாக ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கை முழுவதும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு.

அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி கே பழனிச்சாமி முதல்வராகவும் நெடுஞ்சாலை துறை அமைச்சராகவும் இருந்தார். அப்போது ஒட்டன்சத்திரம், தாராபுரம், அவிநாசி பாளையம் 4 வழி சாலை. திருநெல்வேலி, கொல்லம் 4 வழி சாலை, சென்னை வண்டலூர், வாலாஜா 6 வழி சாலை போன்ற பல்வேறு சாலை அமைப்பு பணிகள், விரிவாக்க பணிகள், பராமரிப்பு பணிகள் புதிய திட்டங்கள் ஆகிய பணிகளுக்கான டெண்டர்களை  தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கியதாகவும் இதனால் அரசுக்கு 4800 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.

வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால் அன்று நீதிபதி குற்ற பத்திரிக்கையை பிரித்து பார்க்காமல் விசாரணை ஒரு தலைப்பட்சமாக நடைபெற்று இருக்கிறது என்று கூறினார். மேலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து எடப்பாடி தரப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிபிஐ விசாரணை ரத்து செய்தும், லஞ்ச ஒழிப்புத்துறை வழங்கிய குற்றப்பத்திரிக்கையின் படி வழக்கை நடத்தவும் ஆணை பிறப்பித்தார்.

இதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பதவி ஏற்ற பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி கடந்த அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட விசாரணையை ரத்து செய்வதாக அறிவித்தார். இதை தொடர்ந்து ஆர். எஸ்.பாரதி தனது மனுவை திரும்ப கூறுவதாக கூறினார்.இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணை கொண்டு வழக்கின் அடுத்த நடவடிக்கைகள் அமையும் என்றும், ஆரம்ப கட்ட விசாரணையில் குறைகள் ஏதும் இல்லை என்றும், தற்போது மீண்டும் திமுக ஆட்சியில் விசாரணை நடத்தப்படுவது தேவையற்றது என்றும் கூறி ஆர். எஸ்.பாரதியின் மனுவை முழுவதுமாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com