தி.மு.க. இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்! இந்தி மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பு!

udhayanidhi stalin
udhayanidhi stalin

தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்நடைபெறிகிறது. இந்தி திணிப்பு, நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத்தேர்வுபோன்றவற்றை கண்டித்து , தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. இளைஞர் அணிமற்றும் மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னையில்நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9.30 மணிக்கு நடைபெறும்ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்தலைமை தாங்குகிறார்.

இந்தி எதிர்ப்பு என்பது ஒரு நூற்றாண்டாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தி திணிப்பு என்பது அவ்வப்போது வருவதும், பின்பு போராட்டங்கள் மூலம்தடுக்கப்படுவதும் தமிழகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சுதந்திரத்துக்குமுன்பே தொடங்கிய போராட்டம் இது.அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்தஉரிமைப்படி, இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளும் சமம். அலுவல் மொழி சட்டம் திருத்தப்படவில்லை.

தற்போது முதல் முறையாக மத்தியமந்திரி அமித்ஷா தலைமையிலான குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இதன்மூலம் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில்இனி ஆங்கிலம் தேவையில்லை, இந்தி மட்டும் போதும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானது ஆகும். தமிழகமாணவர்கள் இனி ஐ.ஐ.டி.யில் படிக்க முடியாத நிலை வரும். சமூகநீதி, சமத்துவம், சமவாய்ப்புக்கு எதிரானது. இனிவரும் காலங்களில் கேந்திரியவித்யாலயா பள்ளிகளில், ஆங்கிலத்துக்கு பதில் இந்தி மயமாக்கும் முயற்சிநடக்கிறது. வருகிற காலங்களில், மத்திய அரசின் தொடர்பு மொழி இந்தியாகஇருக்கும் என சொல்கிறார்கள்.

இந்த பிரச்சினைக்கு மத்தியில், மத்திய கல்வித்துறை இணை மந்திரி அளித்தபேட்டியில், இனி எல்லா படிப்புக்கும் ஒரே பொது நுழைவுத்தேர்வு என்கிறார். ஏற்கனவே, மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவுத் தேர்வை எதிர்த்து வருகிறோம்என்கிறார் திமுக மாணவ செயளாளர் எழிலரசன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com