அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராகும் எடப்பாடி? நெருங்கி வரும் கிளைமாக்ஸ்!

அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராகும் எடப்பாடி? நெருங்கி வரும் கிளைமாக்ஸ்!

அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் பதவிக்கான மனுத்தாக்கல் நேற்று நிறைவடைந்தது. அடுத்த ஞாயிறு அன்று தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஓ.பி.எஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். நேற்று வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்கிற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்நிலையில் சுதாரித்த ஓ.பி.எஸ் தரப்பு, உயர்நீதிமன்றத்தை நாடியது. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பைச்சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்டோர் தனித்தனியாக அவசர வழக்குகளை தாக்கல் செய்தார்கள். அனைத்தையும் உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும என்று கோரிக்கையும் முன்வைத்தார்கள்.

ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ள போது, திடீரென்று தேர்தல் அறிவிக்க வேண்டிய அவசியம் என்னவென்று கேள்வி எழுப்பப்பட்டது. ஓ.பி.எஸ், இ.பி. எஸ் இரு தரப்பினரும அது குறித்து விளக்கம் அளித்தார்கள். ஓ.பி.எஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர் தொடுத்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. 27ம் தேதி விசாரணைக்கும் வர இருக்கிறது.

ஒ.பி.எஸ்ஸை இனி ஒருங்கிணைப்பாளர் என்று அழைக்கமுடியுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது, ஓ.பி.எஸ் தரப்பு பதிலளிக்க அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணை வரும 27ம்தேதி ஒத்திவைக்கப்பட்டிருககிறது. இதற்கிடையே தேர்தலை தடை செய்யும்படி ஓ.பி.எஸ் தரப்பு கேட்டுக்கொண்டதால் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு இன்று எடுத்துக் கொண்டது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் எனவும், தேர்தல் முடிவுகளை மார்ச் 24ஆம் தேதி வரை வெளியிட வேண்டாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த பிரதான

வழக்கு 22ம் தேதி விசாரிக்கப்பட்டு 24ம் தேதி தீர்ப்பு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி இருந்தாலும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் பிரச்னைக்கு ஒரு தெளிவு கிடைத்துவிடும். அடுத்த ஞாயிறு அன்று தேர்தல் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. எது எப்படியோ அடுத்த வாரம் திங்கள் கிழமைக்குள் அ.தி.மு.கவின் புதிய பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவார்.

இனி எடப்பாடியை யாராலும் தடுக்க முடியாது. எடப்பாடி அணியினரின் உற்சாகத்தை தற்காலிகமாக தடுத்திருகிறார்கள். அதற்கே ஓ.பி.எஸ் அணி, சிரமப்பட வேண்டியிருந்தது. ஒருவேளை தேர்தல் ஆணையத்தை ஓ.பி.எஸ் நாடவேண்டும என்று கால அவகாசம் கேட்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இம்முறை நீதிமன்ற உத்தரவு எடப்பாடிக்கு சாதகமாக இருக்க வாய்ப்பு உண்டு. பொதுச்செயலாளராக பதவியேற்பது ஒருவாரம் காலம் தள்ளிப் போடப்பட்டிருககிறது. மற்றபடி, எடப்பாடி பொதுச்செயலாளராவதை யாராலும் தடுக்க முடியாது என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com