ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தே.மு.தி.க களமிறங்க தயார்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தே.மு.தி.க களமிறங்க தயார்!

நேற்று காலை, தே.மு.தி.க. கட்சியின் பொருளாளர், பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில், கோயம்பேட்டில் உள்ள, தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அழகாபுரம் மோகன்ராஜ், எல்.கே. சுதீஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,  ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத் தேர்தலில் ,  ஈரோடு கிழக்கு  மாவட்டச் செயலாளர், ஆனந்த்  போட்டியிடுகிறார். இந்நிலையில், தே.மு.தி.க. யாருடனும் கூட்டணியில் இல்லை' என்று தெரிவித்திருக்கிறார்.

ஈரோடு இடைத் தேர்தலில், தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர், திரு.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடும் நிலையில், இப்போது தே.மு.தி.க.வும் களத்தில் குதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அ.மு.மு.க தலைவர் தினகரன் வேறு போட்டியிடப் போவதாக தகவல்கள் கசிகின்றன.

ஆளும் கட்சியின் பணபலம், ஆள்பலம், அதிகாரபலம் இத்தனையும் மீறி, போட்டியிடும் இதரக் கட்சிகளில் ஒன்று, ஜெயிக்குமேயானால், நிச்சயம் பாராட்டு மழையில் நனையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com