மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி மருத்துவமனையில் அனுமதி!

மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி மருத்துவமனையில் அனுமதி!

லோக்சபா முன்னாள் சபாநாயகரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான மனோகர் ஜோஷி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிவசேனாவின் மூத்த தலைவரான மனோகர் ஜோஷிக்கு தற்போது 85 வயதாகிறது. திங்களன்று "அரை கோமா நிலையில்" பி டி இந்துஜா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

ஜோஷிக்கு மூளையில் உண்டான கட்டியால் சிக்கல்கள் உள்ளன என்பதால் அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார், அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுகிறது. பாதி நினைவு தப்பிய நிலையே நீடித்தாலும் உடல்நலனைப் பொருத்தவரை அவர் நிலையாக இருக்கிறார். அவர் வென்டிலேட்டர் உதவியின்றி சுவாசித்துக் கொண்டிருக்கிறார். மருத்துவ ரீதியாக திறனுடன் நிர்வகிக்கப்படுகிறார்.

-என்று மருத்துவமனை கூறியது.

ஜோஷியின் உடல்நிலை குறித்து விசாரிக்க முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மனைவி ராஷ்மி மற்றும் கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். மூத்த தலைவரான மனோகர் ஜோஷி , மும்பை மேயராகவும், எம்எல்ஏவாகவும் இருந்தார். அவர் 1995 முதல் 1999 வரை முதல்வராகவும், இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 2002 முதல் 2004 வரை மக்களவை சபாநாயகராகவும் இருந்தார். தவிர, மகாராஷ்டிராவின் காங்கிரஸ் அல்லாத முதல் முதல்வராகவும் இவரே இருந்தார். சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர், சிவசேனா நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேவின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com