கட்சி ஆவணங்களை ஒப்படைக்கக் கோரிய இபிஎஸ் மனு மீது விசாரணை!

கட்சி ஆவணங்களை ஒப்படைக்கக் கோரிய இபிஎஸ் மனு மீது விசாரணை!

டந்த வருடம் ஜூலை மாதம் 11ம் தேதியன்று அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை வானகரத்தில் நடத்திக்கொண்டிருந்தார். அதே சமயத்தில் தனது ஆதரவாளர்களுடன் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்த பொருட்களை உடைத்து கலவரம் செய்ததோடு, அக்கட்சி சம்பந்தமான 118 ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து அதிமுக தலைமைக் கழகம் சார்பில் இதுகுறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றும் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சிபிசிஐடி போலீஸார் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களிடம் திருப்பிக் கொடுத்த அதிமுக கட்சி அலுவலகம் மற்றும் வாகனங்கள் தொடர்பான 118 ஆவணங்களை சிபிசிஐடி போலீஸார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருந்தனர்.

தங்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து முறைகேடாக எடுத்துச் செல்லப்பட்ட அந்த 118 ஆவணங்களையும் தங்களிடமே ஒப்படைக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இம்மாதம் 23ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com