அதானி மீது அரசு எப்படி நடவடிக்கை எடுக்கும்? - .யின் கிண்டல்!

அதானி மீது அரசு எப்படி நடவடிக்கை எடுக்கும்? - .யின் கிண்டல்!

இந்திய தொழிலதிபர்களுக்கு வெளிநாடுகலில் உள்ள (போலி) நிறுவனங்கள் குறித்து தகவல் ஏதும் இல்லை என்று கூறும் மத்திய அரசு அதானி மீது எப்படி நடவடிக்கை எடுக்கும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் கிண்டலாக கூறியுள்ளார்.

அதானி-ஹிண்டர்பர்க் விவகாரம் தொடர்பான ஒரு கேள்விக்கு மாநிலங்களவையில் பதில் அளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய தொழிலதிபர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள ஷெல் நிறுவனங்கள் (போலி நிறுவனங்கள்) குறித்து எங்களுக்கு தகவல் ஏதும் இல்லை என்று எழுத்து மூலம் ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அப்படியிருக்கையில் அரசு, கெளதம் அதானி மீது எப்படி நடவடிக்கை எடுக்கும் என்று மொய்த்ரா கிண்டலாக கூறியுள்ளார். மேலும் நிர்மலா சீதாராமன் படத்துடன் மூன்று குரங்குகளின் படத்தையும் (தீயதை பார்க்காதே, தீயதை கேட்காதே, தீயதை பேசாதே) தொடர்பு படுத்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

கெளதம் அதானி முறைகேடு விவகாரம் வெளிவந்ததிலிருந்து மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசு மீது இடைவிடாமல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பங்குகளின் விலையை அதிகரிக்க அதானி நிறுவனம் செயற்கையாக (போலியாக) நிறுவனங்களை உருவாக்கி முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹன்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதானி முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால், மத்திய அரசு அதற்கு மறுத்துவருகிறது. இதனால் நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கியது.

அதானி முறைகேடு விவகாரம் தொடர்பாக பங்குச் சந்தை, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் பிரிட்டிஷ் பத்திரிகையான ஃபானான்சியல் டைம்ஸ் இந்தியாவின் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான தகவல்கள் அதானி குழுமம் 2017 முதல் 2022 வரை 2.6 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாக கூறியிருந்தது. இதில் அதானிக்கு தொடர்பு இருக்கிறதா இல்லையா என்று டுவிட்டர் மூலம் மொய்த்ரா கேள்வி எழுப்பியிருந்தார்.

அதானி விவகாரத்தை நான் நாடாளுமன்றத்தில் எழுப்பினாலே பிரதமர் மோடி பயப்படுகிறார். அதன் காரணமாகவே என்னை தகுதி நீக்கம் செய்துள்ளனர் என்று ராகுல்காந்தி கூறிவருகிறார். அதானி விவகாரம் குறித்து ராகுல் எழுப்பிய கேள்விகள் நாடாளுமன்றத்தின் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com